அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பறவைகளுக்கு மிக தீவிரமான தொற்றான H5N1 பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கோழி உள்ளிட்ட பறவைகளை அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டில் அரசு சார்பில் நடத்தப்படும் கோழிப்பண்ணையில் கடந்த ஜனவரி 6ஆம் தேதியில் இருந்து கோழிகள் உயிரிழக்கத் தொடங்கின. இதை அடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து அந்த பண்ணையில் ஒரு வார காலத்திற்குள் காய்ச்சல் ஏற்பட்டு 1,800 கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில கால்நடைத்துறை அமைச்சர் சின்சூ ராணி உத்தரவிட்டுள்ளார்.இன்த பண்ணையில் சுமார் 5000க்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
இந்த கோழிகளிடம் முதல்கட்டமாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் உறுதியானது. பின்னர் மத்தியபிரதேச மாநிலம் போபாலுக்கு அனுப்பிய ஆய்வின் முடிவுகளும், பறவை காய்ச்சலை உறுதி செய்தன. சுற்றுவட்டாரங்களில் உள்ள வளர்ப்புப் பறவைகளை அழிக்கும் நடவடிக்கையிலும் அரசுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பெருங்குழி பகுதியில் மட்டும் முதல்கட்டமாக சுமார் 3000க்கும் மேற்பட்ட பறவைகளை அழித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bird flu, H10N3 Bird Flu, Kerala