நாட்டின் 7 மாநிலங்களில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், உயிரியல் பூங்காக்கள் நாள்தோறும் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், இமாசல பிரதேசம், ஹரியானா, குஜராத், கேரளா, ஆகிய 7 மாநிலங்களில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 7 மாநிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. டெல்லி, சத்தீஷ்கர், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உயிரியல் பூங்காவுக்குள் பாதிக்கப்பட்ட பகுதி அறிவிக்கப்பட்டால், மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு மண்டலத்திற்குள் உயிரியல் பூங்கா இருந்தால், அந்த பகுதி பறவை காய்ச்சல் இல்லாத பகுதியாக அறிவிக்கப்படும் வரை, நாள்தோறும் மத்திய உயிரியல் பூங்கா ஆணைய அலுவலகத்திற்கு அறிக்கை கொடுக்க வேண்டும். கண்காணிப்பு மற்றும் பறவை நிர்வாகத்தை வலுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.... இம்மாத இறுதியில் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம்
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ்வரும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில், உள்ளூர் பகுதிகளில், பறவைகள் பிரிவில் பார்வையாளர்கள் நுழைவு கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட வேண்டும். உயிரியல் பூங்காவினுள் நுழையும் அனைத்து வாகனங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். நீர்நிலைகள் கண்காணிக்கப்பட வேண்டும். செயற்கை நீர்நிலைகளை உலர வைக்க வேண்டும்.
அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரையில், பறவைகள் பரிமாற்ற திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். புலம் பெயர்ந்த பறவைகளின் நுழைவுகள் கண்காணிக்கப்பட வேண்டும். பராமரிப்பாளர்களும் கிருமி நாசினி நெறிமுறையை பின்பற்ற வேண்டும். பிபிஇ என்னும் பாதுகாப்பு உடைகளை அணிய வேண்டும். மேலும், அனைத்து பறவை பிரிவுகளிலும் சுகாதார நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bird flu