ஹோம் /நியூஸ் /இந்தியா /

Bipin Rawat: முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

Bipin Rawat: முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

பிபின் ராவத்

பிபின் ராவத்

குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத், மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்.  கேப்டன் வருண் சிங் வெல்லிங்டன் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று தெரிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர்  தமிழகத்தின் குன்னூர் அருகே இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் கோவை மாவட்டம் சூலூர் விமானதளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது எனினும் பிபின் ராவத் நிலை குறித்த எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்ததாக இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப் படை தனது ட்விட்டர் பக்கத்தில்,  நீலகிரி மாவட்டம் வெல்லிங்டனில் உள்ள பாதுகாப்பு கல்லூரியில்  நடைபெறும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக முப்பை தலைமை தளபதி பிபின் ராவத், 4 பணியாளர், 9 பயணிகள் ஆகியோர்  IAF Mi 17 V5 ரக ஹெலிகாப்டரில் இன்று பயணித்தனர்.  இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: விபத்துக்குள்ளான Mi 17 V5 ஹெலிகாப்டர் இவ்வளவு பாதுகாப்பை கொண்டதா? வியக்கவைக்கும் தகவல்கள்

இதில், பிபின் ராவத், மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்.  கேப்டன் வருண் சிங் வெல்லிங்டன் மருத்துவமனையில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று தெரிவித்துள்ளது.

First published:

Tags: Army Chief General Bipin Rawat, Helicopter Crash