ஹோம் /நியூஸ் /இந்தியா /

Helicopter Crash: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு இது மட்டும் தான் காரணம் - விசாரணையில் தகவல்

Helicopter Crash: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு இது மட்டும் தான் காரணம் - விசாரணையில் தகவல்

Bipin Rawat

Bipin Rawat

குன்னூர் விபத்து குறித்தான முழு விசாரணை அறிக்கை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  குன்னூர் அருகே ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டரின் விபத்துக்கு காரணம் பைலட்டின் தவறே என விசாரணையில் தெரியவந்துள்ளது.

  நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று, தனது மனைவி, உயர் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் தமிழகம் வந்தனர். கோவை மாவட்டம் சூலூரிலிருந்து குன்னூருக்கு Mi-17V5 ரக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பயணம் சென்ற நிலையில்,, அந்த ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக காட்டேரி பகுதியில் உள்ள வனப்பகுதியில் திடீரென விழுந்து நொருங்கி தீப்பிடித்து எரிந்தது.

  இந்த கோர விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், உயர் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு விதமான தகவல்கள் உலா வந்தன. விவிஐபி பயணித்த அந்த ஹெலிகாப்டர் பயணம் செய்ய பாதுகாப்பானதாக இருந்ததா என சந்தேகம் எழுந்தது.

  Also read:   ‘என்ன வச்சு காமெடி பன்னிட்டாங்க..’ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கதறி அழுத அரசியல் கட்சி பிரமுகர்!

  இது குறித்து விசாரிக்க விமானப் படை அதிகாரி மானவேந்திர சிங் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன், குன்னூர் விபத்து குறித்தான முழு விசாரணை அறிக்கை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் விபத்து குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளன.

  விசாரணை கமிட்டியின் கூற்றுப்படி, பைலட்டின் தவறு காரணமாகவே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நீலகிரி மலைப்பகுதியில் வானிலையில்  எதிர்பாராத மாற்றத்தால், ஹெலிகாப்டர் மேககூட்டத்துக்குள் நுழைந்ததன் விளைவாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கு தொழில்நுட்ப அல்லது இயந்திர கோளாறு, நாசவேலை காரணம் அல்ல என தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டர் நல்ல நிலையில் இருந்ததாகவும் CFIT எனப்படும் தொழில்நுட்ப குறியீடே விபத்துக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது அந்த தருணத்தில் முடிவெடுப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கிறது.

  Also read:  கன்னியாஸ்திரி பாலியல் வழக்கில் பிஷப் விடுவிப்பு.. குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோல்வி!

  ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி, விமானி அறையில் பதிவான உரையாடல்கள் மற்றும் சம்பவ இடத்தின் சாட்சியங்கள் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட காலநிலை மாற்றத்தால், ஏதேனும் நிலப்பகுதியில் அல்லது வேறு ஏதேனும் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்படும் சூழல் இது என விமானத்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

  Published by:Arun
  First published:

  Tags: Helicopter, Helicopter Crash, Indian Army Commander Bipin Rawat