41 வயதில் மரணமடைந்த இந்தியாவின் கடைசி ஒராங்குட்டான்!

பின்னி எனப் பெயர் கொண்ட அந்த ஒராங்குட்டானுக்கு பல சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்துள்ளன.

41 வயதில் மரணமடைந்த இந்தியாவின் கடைசி ஒராங்குட்டான்!
பின்னி
  • News18
  • Last Updated: May 31, 2019, 5:29 PM IST
  • Share this:
இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு ஒராங்குட்டனும் நேற்று காலமடைந்தது.

ஒடிசாவில் உள்ள நந்தன்கனன் உயிரியல் பூங்காவில் இந்தியாவின் ஒரேயொரு ஒராங்குட்டான் வாழ்ந்து வந்தது. கடந்த 2003-ம் ஆண்டு ராஜிவ் காந்தி தேசிய பூங்காவிலிருந்து இந்த ஒராங்குட்டான் ஒடிசா பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது.

சிங்கப்பூரில் பிறந்ததாகக் கூறப்படும் இந்த ஒராங்குட்டானுக்கு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் தொண்டையில் தொற்றுக் காயம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஒராங்குட்டான், சமீப காலமாகவே மூச்சிவிட சிரமப்பட்டு வந்தது.


பின்னி என்ற பெயர் கொண்ட அந்த ஒராங்குட்டானுக்கு பல சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தன. இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், எதுவும் பயனளிக்காமல் கடந்த சில நாள்களாகக் கடுமையான காய்ச்சல் மற்றும் சளித்தொல்லையால் அவதிப்பட்டு வந்த பின்னி நேற்று தனது 41-வது வயதில் உயிரிழந்தது.

மேலும் பார்க்க: நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கிய அமெரிக்கா!
First published: May 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading