சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய பெண் செயற்பாட்டாளர் பிந்து அம்மினி மீது மர்ம நபர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ மலையாள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலானது மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலம் ஆகும். சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் 48 நாட்கள் கடினமான விரதம் இருந்து இருமுடி கட்டி புனிதப் பயணம் மேற்கொண்டு ஐயப்பனை தரிசித்து வருகிறார்கள். இக்கோவிலில் வீற்றிருக்கும் ஐயப்பன் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கும் கடவுள் என்பதால், இனப்பெருக்க பருவத்தில் உள்ள பெண்கள் குறிப்பாக 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் இக்கோவிலில் வழிபட அனுமதிக்கப்படுவதில்லை. கேரள உயர்நீதிமன்றமும் பெண்கள் இந்த கோவிலில் வழிபட தடை விதித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக பெண் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதியளித்தது.
Also read :
குடும்ப வாழ்க்கையை தொடங்க 'நல்ல நேரம்' அமையவில்லை என 11 ஆண்டுகளாக கணவரை காக்க வைத்த மனைவி - பரபரப்பு வழக்கு
அந்த சமயம் பெண் செயற்பாட்டாளர்கள் சிலர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கினர். அதிலிருந்த சில பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல 2018 டிசம்பரில் முற்பட்டபோது பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். எனினும், 2019ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் பிந்து அம்மினியும், கனகதுர்க்கா என்பவரும் சேர்ந்து சபரிமலை கோவிலில் நுழைந்து வழிபட்டனர். இதன் பிறகு கோவில் புனிதம் கெட்டுவிட்டதாக பூசாரிகள் கோவிலை பூட்டி சுத்தம் செய்தனர். இந்த விவகாரம் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

சபரிமலை
இந்நிலையில், பிந்து அம்மினி வழக்கு ஒன்று தொடர்பாக கோழிக்கோடு கடற்கரையில் வழக்கறிஞரை சந்திக்க இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை தடுத்து நிறுத்திய மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை திட்டி தீர்த்ததுடன், அவர் முகத்திலும் குத்துகளை விட்டுள்ளார். இதில் நிலை குலைந்து பிந்து கீழே விழுந்திருக்கிறார். அங்கிருந்தவர்கள் தலையிட்ட பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
Also read:
பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer
பிந்துவின் புகாரின் பேரில் வெள்ளாயி போலீஸ் நிலையத்தில் மர்ம நபர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிந்து தாக்குதலுக்கு ஆளான வீடியோ மலையாள சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.