ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்க மசோதா...! தெலுங்குதேசம், விவசாயிகள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திராவில் இன்று தொடங்கும் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 3 தலைநகரங்கள் அமைப்பது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனிடையே பல்வேறு இடங்களில் போராட்டங்களும் வெடித்துள்ளன.

  தெலங்கானா மாநிலத்தின் தலைநகராக ஹைதராபாத் செயல்படும் என அறிவிக்கப்பட்டதால், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது அமராவதியை ஆந்திர தலைநகராக உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

  தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அமராவதியோடு விசாகப்பட்டினம், கர்னூலையும் நிர்வாக நகரங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான மசோதா இன்றைய சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  3 தலைநகரங்கள் அமைக்கும் அரசின் முடிவைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியும், அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகளும் சட்டமன்றத்தை நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.

  அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 48 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குண்டூர், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

  சட்டமன்றக் கூட்டம் நடைபெறும் அமராவதியில் 7 எஸ்.பி.க்கள் தலைமையில் 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: