முகப்பு /செய்தி /இந்தியா / ரத்தன் டாடாவை சந்தித்த பில்கேட்ஸ்... முக்கிய நடவடிக்கைகளில் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவிப்பு..!

ரத்தன் டாடாவை சந்தித்த பில்கேட்ஸ்... முக்கிய நடவடிக்கைகளில் இணைந்து செயல்படவுள்ளதாக அறிவிப்பு..!

ரத்தன் டாடாவை சந்தித்த பில் கேட்ஸ்

ரத்தன் டாடாவை சந்தித்த பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்ததையடுத்து டாடா குழுமத்தில் நிறுவனர் ரத்தன் டாடாவை சந்தித்துப் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Janvi

உலகின் முதன்மையான நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட நிறுவனத்தில் இணை நிறுவனர் பில் கேட்ஸ், டாடா குழுமத்தின் நிறுவனர் ரத்தன் டாடா மற்றும் நிர்வாக தலைவர் என்.சந்திரசேகரன் ஆகியோரை மும்பையில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பில் கேட்ஸ், ரத்தன் டாடாவிற்கு ‘How to Prevent the Next Pandemic’ மற்றும் ‘How to Avoid a Climate Disaster’ என்ற இரண்டு புத்தங்களைப் பரிசாக வழங்கியுள்ளார்.

இது குறித்து, பில் கேட்ஸ்யின் கேட்ஸ் பவுண்டேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய செய்தியை வெளியிட்டுள்ளனர். ரத்தன் டாடா மற்றும் பில் கேட்ஸ் இருவரும் ஏழைகளுக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். பில் கேட்ஸ்யின் பவுண்டேசன் உலக சுகாதாரம் மற்றும் வறுமையைக் குறைப்பதற்கான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதே போல் ரத்தன் டாடாவும் தொண்டு நிறுவனம் மூலம் பல கோடிக்கணக்கில் உதவிகளை வழங்கி வருகிறார்.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இருவரும் இணைந்து சுகாதாரம், நோய் கண்டறிதல் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் மேம்படுத்துவதற்கான இணைந்து செயல்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த சந்திப்பு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : எல்லைப் பகுதியில் இனி யாரும் தப்ப முடியாது… பறந்து கண்காணிக்க ராணுவ வீரர்களுக்கு ஜெட்பேக்...

தொடர்ந்து, இந்தியாவில் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்களைச் சந்தித்து வருகிறார். அந்த வகையில், ரிசர்வ வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரின் மனைவி அஞ்சலி ஆகியவர்களைச் சந்தித்துள்ளார். மேலும் அவரின் ஹார்வர்ட் நண்பர் மற்றும் மஹிந்திரா அறக்கட்டளை தலைவர் ஆனந்த் மஹிந்திராவை சந்தித்துப் பேசியுள்ளார். அவருக்கும் பில் கேட்ஸ்-யின் சுயசரிதைப் புத்தகத்தையும் பரிசாக வழங்கியுள்ளார்.

First published:

Tags: Bill Gates, Ratan TATA