முகப்பு /செய்தி /இந்தியா / சப்பாத்தி சுட்ட பில்கேட்ஸ்.. வீடியோ பார்த்துவிட்டு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்..!

சப்பாத்தி சுட்ட பில்கேட்ஸ்.. வீடியோ பார்த்துவிட்டு பிரதமர் மோடி சொன்ன அட்வைஸ்..!

ரொட்டி சுட்ட பில்கேட்ஸ்

ரொட்டி சுட்ட பில்கேட்ஸ்

பில்கேட்ஸ்சுக்கு ரெசிபி ஒன்றை ஆலோசனையாக தந்துள்ளார் பிரதமர் மோடி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் பில்கேட்ஸ். பிரபலமான மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான பில்கேட்ஸ், பிற்காலத்தில் பல சமூக நல செயல்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக, ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்து, அங்கு நிலவும் சமூக பொருளதார சிக்கல்களுக்கு தீர்வுகளை காண முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். கேஸ்ட்ஸ் பவுன்டேஷன் என்ற பெயரில் பெரும் அறக்கட்டளை ஒன்றை நிறுவி தனது சமூக சேவைகளை பில்கேட்ஸ் செய்து வருகிறார்.

இந்தியாவுக்கும் அடிக்கடி வருகை தரும் பில்கேட்ஸ், இங்குள்ள தனித்துவமான அம்சங்களை கவனித்து அது தொடர்பான தனது அனுபவங்களை குறிப்பிடுவார். அப்படித்தான் தற்போது பில்கேட்ஸ் இந்திய பாரம்பரிய உணவான சப்பாத்தியை ( Roti)  தன் கைகளாலேயே சமைத்து பார்த்துள்ளார். முன்னணி சமையல் கலை நிபுணரான எய்டன் பிர்னத்துடன் இணைந்து இந்த சப்பாத்தியை அவர் செய்துள்ளார். சமீபத்தில் சமையல் நிபுணர் பெர்னத் இந்தியா வருகை தந்துள்ளார். அப்போது அவர் பீகாரில் உள்ள உணவகங்களில் சப்பாத்தி தயாரிப்பை கற்றுக்கொண்டுள்ளார். அது பிடித்து போக தனது அனுபவத்தை பில்கேட்ஸ் உடன் பகிர்ந்துள்ளார்.

அதன் பேரில் இருவரும் இணைந்து சப்பாத்தி தயாரித்து ருசித்து பார்த்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகும் நிலையில், சப்பாத்தி தயாரித்த பில்கேட்ஸை பிரதமர் மோடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெகுவாக பாராட்டியுள்ளார். அத்துடன் பில்கேட்ஸ்சுக்கு ரெசிபி ஒன்றை ஆலோசனையாக தந்துள்ளார். பிரதமர் மோடி தனது பதிவில் ‘சூப்பர், இந்தியாவில் தற்போது டிரென்டாக உள்ளது சிறுதானிய உணவு வகைகள்தான். உடல்நலத்துக்கும் மிகச் சிறந்த உணவுகள் அவை. சிறுதானியங்களில் பல உணவு வகைகள் இருக்கின்றன. அவற்றையும் நீங்கள் சமைக்க முயற்சி செய்யலாம்’’ என்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை 2023ஆம் ஆண்டை 'சர்வதேச சிறுதானிய வருடம்'என அறிவித்துள்ளது. எனவே, சிறுதானியங்களுக்கு பெயர் போன இந்தியாவிலும் இதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் அரசு சிறுதானிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.

First published:

Tags: Bihar, Bill Gates, Millet, Millets Food, PM Modi