மூன்று அமெரிக்க டாலரில் கொரோனா தடுப்பூசி.. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்துடன் பில்கேட்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்..

கோப்புப் படம்

அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 200 மில்லியன் அளவு கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் தயாரிக்கப்படும். தடுப்பூசிகள் உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி பெற்ற பிறகு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா நோய் தடுப்பூசி தயாரிக்கும் இந்திய நிறுவனத்துடன் பில்கேட்ஸ் நிறுவனம் 300 மில்லியன் கோடி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கோவிஷூல்ட் என்ற கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. கோவிஷூல்ட் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனையில் லண்டனில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக உலகம் முழுவதும் இந்த சோதனையானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

  அதைத் தொடர்ந்து சில வழிகாட்டு நெறிமுறைகள் மாற்றப்பட்டு தடுப்பூசி சோதனையின் போது பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
  இந்த சோதனையை தொடர  லண்டனின் MHRA என்ற மருத்துவ ஒழுங்குமுறை கண்காணிப்புக்குழு அனுமதி வழங்கியது.

  இந்தநிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்து இருக்கக்கூடிய கொரோனோ தடுப்பூசி ஆன கோவிஷூல்ட் தடுப்பூசி தயாரிக்கும் ஒப்பந்தம் இந்தியாவின் சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது.

  இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய நிலையில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளும் ஒரு புறத்தில் தொடங்கியிருக்கின்றன.
  இந்தியாவில் இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் 5 துணை நிறுவனங்களுடன் இந்தியாவில் இந்த மருந்தை விரைவாக தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

  Also read.. ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு  இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் பாதியில் 100 மில்லியன் அளவு தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது 200 மில்லியனாக தயாரிக்க திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனத்தின் இயக்குனர் அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

  கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தாயாரிக்கும் இந்திய நிறுவனத்துடன் பில்கேட்சின் அறக்கட்டளை மொத்தமாக 300 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலமாக ஏழைமக்களும் பயன் பெறும் வகையில் கொரோனா தடுப்பூசியை குறைந்த விலையில் கொடுக்க முடியும் என்று அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

  குறைந்த பட்சமாக மூன்று அமெரிக்க டாலரில் கொரோனா தடுப்பூசியை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 200 இருந்து 300 ரூபாய்க்குள் விற்பனையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 200 மில்லியன் அளவு கொரோனா தடுப்பு ஊசி இந்தியாவில் தயாரிக்கப்படும். தடுப்பூசிகள் உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி பெற்ற பிறகு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Vinothini Aandisamy
  First published: