முகப்பு /செய்தி /இந்தியா / பில்கிஸ் பனோ வன்கொடுமை வழக்கு: 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பில்கிஸ் பனோ வன்கொடுமை வழக்கு: 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

பில்கிஸ் பானு

பில்கிஸ் பானு

கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரத்தின்போது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பனோ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

  • Last Updated :
  • Delhi, India

பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பனோ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரத்தின்போது கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பனோ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வாலிபருக்கு முத்தம் கொடுத்த குற்றத்திற்காக 20 வயது பெண்ணுக்கு சிறை தண்டனை!

இந்நிலையில் தண்டனை காலம் முடியும் முன்பே குற்றவாளிகள் 11 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து கடந்த நவம்பர் 30 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அஜய் ரஸ்டோகி மற்றும் பெலா எம் திரிவேதி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், பெலா எம் திரிவேதி வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதீமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.

First published:

Tags: Supreme court