ஹோம் /நியூஸ் /இந்தியா /

கிரண்பேடி, நாராயணசாமி இடையே 4 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவடைந்தது!

கிரண்பேடி, நாராயணசாமி இடையே 4 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவடைந்தது!

கிரண்பேடி, நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை

கிரண்பேடி, நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை

கிரண்பேடியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முன் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர், தொடர்ந்து 6-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கு ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை 4 மணி நேரத்துக்குப் பிறகு நிறைவடைந்தது.

  புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்று அம்மாநில ஆளுநர் கிரண்பேடிக்கும் நாராயணசாமிக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக போட்டி நிலவிவருகிறது. கடந்த சில மாதங்களாக, இருவருக்கிடையேயான சண்டை உச்சக் கட்டத்தை எட்டியது.

  இந்தநிலையில், கடந்த ஆறு தினங்களுக்கு முன் புதுச்சேரி அரசு அனுப்பிய 39 கோப்புகளுக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி, கிரண்பேடியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முன் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர், தொடர்ந்து 6-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

  இதற்கிடையில், இருவரும் தங்கள் தரப்பு நியாயங்களை ஊடகங்களின் முன் விளக்கிவந்தனர். பின்னர், பொதுவெளியில் விவாதத்தில் பங்கேற்கத் தயாரா என்று நாராயணசாமிக்கு கிரண்பேடி சவால் விடுத்தார். அதனையடுத்து, எப்போதும் வேண்டுமானாலும் விவாதத்தில் பங்கேற்கத் தயார் என்று நாராயணசாமி பதிலளித்தார்.

  இதற்கிடையில், டெல்லியிருந்து கிரண்பேடி நேற்று புதுச்சேரி திரும்பினார். அவர், புதுச்சேரி திரும்பிய நிலையில், இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் வைத்து நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தையில், இலவச வேட்டி, சேலை வழங்குதல், இலவச அரிசி வழங்குதல், மின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

  பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ‘தர்ணாவைத் திரும்பப் பெறுவது குறித்து சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: Kiran bedi, Narayana samy