ஹோம் /நியூஸ் /இந்தியா /

நாராயணசாமி-கிரண்பேடி இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது!

நாராயணசாமி-கிரண்பேடி இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது!

கிரண்பேடி, நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை

கிரண்பேடி, நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை

புதுச்சேரி அரசு அனுப்பிய 39 கோப்புகளுக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி, கடந்த ஆறு தினங்களுக்கு முன் கிரண்பேடியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முன் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கும், அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.

    புதுச்சேரியில் யாருக்கு அதிகாரம் என்று அம்மாநில ஆளுநர் கிரண்பேடிக்கும் நாராயணசாமிக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக போட்டி நிலவிவருகிறது. கடந்த சில மாதங்களாக, இருவருக்கிடையேயான போட்டி உச்சகட்டத்தை எட்டியது.

    புதுச்சேரி அரசு அனுப்பிய 39 கோப்புகளுக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி, கடந்த ஆறு தினங்களுக்கு முன் கிரண்பேடியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளுநர் மாளிகை முன் நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர், தொடர்ந்து 6-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

    இருவரும் தங்கள் தரப்பு நியாயங்களை ஊடகங்களின் முன் விளக்கிவந்தனர். பின்னர், பொதுவெளியில் விவாதத்தில் பங்கேற்கத் தயாரா என்று நாராயணசாமிக்கு கிரண்பேடி சவால் விடுத்தார். அதனையடுத்து, எப்போதும் வேண்டுமானாலும் விவாதத்தில் பங்கேற்கத் தயார் என்று நாராயணசாமி பதிலளித்தார்.

    டெல்லியிருந்து கிரண்பேடி நேற்று புதுச்சேரி திரும்பினார். அவர், புதுச்சேரி திரும்பிய நிலையில், இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நாராயணசாமிக்கும், கிரண்பேடிக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்தப் பேச்சுவார்த்தையில் புதுச்சேரி அமைச்சர்களும், ஒவ்வொரு துறை செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Kiran bedi, Narayana samy