ஹோம் /நியூஸ் /இந்தியா /

செல்ஃபி எடுத்து கின்னஸ் படைத்த சட்டீஸ்கர் போலீஸார்!

செல்ஃபி எடுத்து கின்னஸ் படைத்த சட்டீஸ்கர் போலீஸார்!

பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவிலேயே 10 மணி நேரத்தில் அதிக செல்ஃபிகள் எடுத்த பிலாஸ்பூர் போலீஸாருக்கு கின்னஸ் சாதனை அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

10 மணி நேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேருடன் செல்ஃபி எடுத்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிலாஸ்பூர் போலீஸார்.

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் நகர போலீஸார் ரக்‌ஷா பந்தனை கொண்டாடும் வகையில் ‘ராக்கி வித் காக்கி’ (Rakhi with Khakhi) என்றொரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் பிலாஸ்பூர் நகரில் பணியில் உள்ள 50,033 போலீஸாருக்கு பெண்கள் பலரும் ராக்கி கட்டிவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

10 மணி நேரத்தில் அதிக செல்ஃபிகள் எடுத்துக்கொண்ட பிலாஸ்பூர் போலீஸாருக்கு கின்னஸ் புத்தகம் சாதனை அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதுகுறித்து பிலாஸ்பூர் எஸ்.பி., ஆரிஃப் கூறுகையில், “10 மணி நேரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிக செல்ஃபிகள் எடுக்கப்பட்டதற்காக கின்ன்ஸ் சாதனை அங்கீகாரம் பிலாஸ்பூர் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

’ராக்கி வித் காக்கி’ என்ற நிகழ்ச்சி மூலம் பெண்கள் காவல்துறையினரை எளிதில் அணுகி தங்களது பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்தோம். இதற்காக பிலாஸ்பூர் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, பொது இடம் என பரவலாக போலீஸார் சந்தித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வு கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது.

இந்நிகழ்வில் குழந்தைகள் முதல் பெண்கள் வரையில் பலரும் காவல்துறையினருக்கு ராக்கி கட்டி செல்ஃபி எடுத்துக்கொண்டனர். போலீஸார் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு நிகழ்வுக்கு ஆதரவு அளித்த பல்லாயிரக்கணக்கான பெண்களால் இன்று பிலாஸ்பூர் போலீஸாருக்கு கின்னஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்றார்.

மேலும் பார்க்க: தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் சுனில் அரோரா

Published by:Rahini M
First published:

Tags: Chhattisgarh