வாகனசோதனைக்கு பயந்து பைக்கில் சீறிய இளைஞர்கள்.. கண் இமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர் - அதிர்ச்சி வீடியோ

தெலங்கானா விபத்து

தெலங்கானா மாநிலத்தில் நடந்த இருசக்கர விபத்து தொடர்பான வீடியோ அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

 • Share this:
  தெலங்கானா மாநிலத்தில் காவல்துறையினரின் சோதனையில் இருந்து தப்பிக்க பைக்கில் சீறிய இளைஞர்கள் செக் போஸ்ட்டில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தின் ஜன்னாரம் மண்டல் வனத்தை ஒட்டிய பகுதியாகும். இங்குள்ள வனத்துறையின் சோதனைச்சாவடியில் வழக்கமாக சோதனைகள் நடைபெறும். கொரோனா தொற்று காலம் என்பதால் செக்போஸ்டை மூடிவைத்து வாகன ஓட்டிகளை விசாரித்த பின்னரே அனுமதிக்கின்றனர். மே 22-ம் தேதி வனத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

  Also Read: தடுப்பூசி போட வர்றாங்க... ஆற்றுக்குள் குதித்த கிராம மக்கள் - மருத்துவக் குழுவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றனர். சோதனைக்கு பயந்து சீறிய அந்த வாகன ஓட்டி செக்போஸ்டை கடக்க முயன்றார். இதில் பின்னால் அமர்ந்திருந்த நபரின் தலை செக்போஸ்டில் மோதியதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது.

     அந்த வீடியோ பதிவில், “ செக்போஸ்ட் பின்னால் வன அலுவலர் ஒருவர் நின்றுக்கொண்டிருக்கிறார். எதிரில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தும் படி செய்கை காண்பிக்கிறார் செக்போஸ்ட் மூடியிருக்கிறது. திடீரென பதற்றமடையும் வன அலுவலர் செக் போஸ்டை வேகமாக தூக்குவதற்கு முயற்சி செய்கிறார். அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று செக்போஸ்டை கடக்கிறது. வாகனத்துக்கு பின்னால் அமர்ந்திருந்த நபரின் தலை செக்போஸ்டில் மோத அவர் அப்படியே இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். சாலையில் தூக்கிவீசப்பட்ட நபர் சம்பவ இடத்திலே மரணமடைந்தார்’.

  இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் சந்திரசேகர் என்பது வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்து உயிரிழந்த நபர் சுதாவேனி வெங்கடேஷ் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  Published by:Ramprasath H
  First published: