ஹோம் /நியூஸ் /இந்தியா /

தனி கேஸ் வேணாம்..ஒரே கேசா போட்டு வழக்கை சீக்கிரம் முடிங்க..போலீசுக்கு டிமாண்ட் வைத்த பலே பைக் திருடன்...

தனி கேஸ் வேணாம்..ஒரே கேசா போட்டு வழக்கை சீக்கிரம் முடிங்க..போலீசுக்கு டிமாண்ட் வைத்த பலே பைக் திருடன்...

புதுச்சேரியில் சிக்கிய பைக் திருடன்

புதுச்சேரியில் சிக்கிய பைக் திருடன்

பிடிபட்ட நபர் காலை முதல் மாலை வரை 4,5 வாகனங்களை வெவ்வேறு இடங்களில் திருடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

புதுச்சேரி நகர பகுதியில் அரசு மருத்துவமனை, சட்டபேரவை, கடற்கரை, பூங்கா, விடுதிகள் என மக்கள் அதிகம் கூடும்   இடங்களில்  கடந்த 3 மாதங்களில்  25க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போனது. ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் Splendor bike மட்டும் 4,5 என தொடர்ச்சியாக திருடப்பட்டது.தன்வந்தரி நகர், முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை, பெரியகடை, ஒதியன்சாலை என நகரின் அனைத்து காவல் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள்.

ஏதோ ஒரு கும்பல் திட்டமிட்டு பைக் திருடுவதாக சந்தேகித்த காவல்துறைக்கு கிடைத்த சிசிடிவியில் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.ஒரே நபர் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் பைக் திருடுவதை கண்டனர். 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் அரசு மருத்துவமனைக்கு முன் வாசலில் செல்வதும் பின்பு பின் வாசல் வழியாக வெளியே வந்து நோட்டமிட்டு மருத்துவமனை எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்வதும் பதிவாகி இருந்தது.

இதே போல் நகர பகுதியான காமராஜ் சாலையிலும் ஒரு இருசக்கர வாகனத்தை அதே நபர் திருடி செல்வது பதிவாகி இருந்தது.அவரது புகைப்படத்தை வைத்து தேடியதில் புதுச்சேரியில் குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை. தமிழ்நாடு காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டதில் வேலூர் காவல்துறையினர் அந்த நபர் ஆற்காடு பகுதியை சேர்ந்த சேகர் என்கிற தனசேகர் (43),  என்பதும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் பைக் திருட்டு வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து வேலூர் விரைந்து உருளையன்பேட்டை ஆய்வாளர் பாபுஜி, தனிப்படை ஆய்வாளர் ரமேஷ்  தலைமையில்  காவல்துறையினர் வேலூர் பகுதியில் பதுங்கி இருந்த சேகரை கைது செய்து  புதுச்சேரி அழைத்து வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள்

இதில் முதற்கட்ட விசாரணையில் அவர் புதுச்சேரியில் மட்டும்  15  இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்பு கொண்டார். தினமும் வேலூரில் இருந்து புதுச்சேரிக்கு  பேருந்தில் வரும் சேகர் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்வார். எளிதில் திறக்க கூடியது, கூடுதல் பூட்டு போடா பைக் என தேர்வு செய்து திருடுகிறார். அதனை ஓட்டி சென்று தமிழ்நாடு பகுதிகளில் நிறுத்தி விட்டு சில நிமிடங்களில் பேருந்து ஏறி மீண்டும் புதுச்சேரி வந்து வாகனம் திருடுகிறார். காலை முதல் மாலை வரை 4,5 வாகனங்களை வெவ்வேறு இடங்களில் திருடுகிறார். மாலையில் தமிழ்நாடு பகுதியில்  சாராயம் கடத்தும் சிலரிடம் பைக்குகளை விற்று விட்டு பேருந்து பிடித்து ஊர் திரும்புகிறார்.

இதையும் படிங்க: அக்னிபாத்துக்கு எதிராக ஏன் போராட்டங்கள் வெடிக்கின்றன? அரசாங்கம் என்ன சொல்கிறது

இது தான் இவரது தினப்படி வேலை. முதல் கட்டமாக 7   வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அப்போது காவல்துறையினரிடம் பைக் திருடன் சேகர் வைத்த கோரிக்கை காவல்துறையே வியக்க வைத்தது. அந்த திருடன் காவல்துறையினரிடம் " சார் 15 பைக் திருடி இருக்கேன். தனித்தனியாக வழக்கு போடாதீங்க. எல்லாவற்றையும் ஒன்றாக போடுங்க. சீக்கரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள். அதுவரை நான் புதுச்சேரி சிறைச்சாலையிலேயே இருக்கேன். வழக்கை முழுவதுமாக முடித்து விட்டு அடுத்த ஊர் போவேன்" என கூறியது காவல்துறையினருக்கு வியப்பை ஏற்படுத்தியது. முதல் கட்டமாக 7 பைக்குகளை பறிமுதல் செய்த உருளையன்பேட்டை காவல்துறையினர் அவனை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மீதுமுள்ள பைக்குகளை பறிமுதல் செய்ய துவங்கியுள்ளனர்.

Published by:Kannan V
First published:

Tags: Bike Theft