பீகார் மாநிலத்தில் உள்ள ரோத்தாஸ் மாவட்டத்தில் பெண் ஒருவர் உறவினர்களால் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் தீபக் ராம் மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளுடன் சிங்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
இந்த பெண்ணை தனது கிராமத்தைச் சேர்ந்த வேறொரு நபரிடம் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இது இவரது கணவரின் குடும்பத்தாருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில், அந்த பெண்ணின் கணவர் தீபக் ராம் அருகே உள்ள காவல்நிலையத்தில் சென்று இந்த விவகாரத்தில் தீர்வு வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, தம்பதியை அழைத்து ஆலோசனை வழங்கி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், அந்த பெண் கணவருடன் கிராமத்திற்கு வந்தவுடன், கணவர் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று சேர்ந்த அந்த பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ஆஷிஷ் பாரதி பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இதையும் படிங்க:
ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுமி மரணம் - 18 பேர் மருத்துமனையில் அனுமதி - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
அத்துடன் கணவர் தீபர் மற்றும் அவரது உறவினர் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.