ஹோம் /நியூஸ் /இந்தியா /

'வயிறு வலினு போனேன்.. கிட்னியை காணோம்' - தனியார் மருத்துவமனை மீது பரபர குற்றச்சாட்டை கிளப்பிய பெண்

'வயிறு வலினு போனேன்.. கிட்னியை காணோம்' - தனியார் மருத்துவமனை மீது பரபர குற்றச்சாட்டை கிளப்பிய பெண்

பீகாரில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு

பீகாரில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு

கருப்பை பாதிப்பு சிகிச்சை என்று கூறி பீகார் தனியார் மருத்துவமனையில் பெண்ணின் இரு சிறுநீரகம் திருடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Bihar, India

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுநீரக கல் அறுவை சிகிச்சைக்கு சென்றவரிடம் இருந்து சிறுநீரகம் திருடப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதேபோல் ஒரு அதிர்ச்சி சம்பவம் பீகாரிலும் நிகழ்ந்துள்ளது.

  பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் சுனிதா தேவி. இவருக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்ட நிலையில் அங்குள்ள பரியாப்பூர் என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

  மருத்துவர்கள் கருப்பைில் தொற்று ஏற்பட்டட்டுள்ளதாகவும் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்று கூறி கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் சுனிதா. இருப்பினும் தனது அடிவயிற்றில் தொடர்ந்து வலி இருந்துள்ளதால் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்துள்ளார் சுனிதா. அப்போது தான் அவரின் இரண்டு சிறுநீரகமும் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  இதையடுத்து ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனை மீது புகார் அளித்துள்ள சுனிதா, தனது இந்த நிலைக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தான் பொறுப்பு என்றுள்ளார். "அறுவை சிகிச்சை செய்து எனது சிறுநீரகத்தை திருடிய அந்த மருத்துவர், நான் உயிர் வாழ்வதற்கு அவரின் சிறுநீரகத்தை தற்போது தர வேண்டும். நான் ஏழை என்பதால் எனது புகாரை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

  இதையும் படிங்க: இனி ரயிலுக்கு குறுக்கே மாடு வராது.. வேற லெவல் ப்ளானை கையில் எடுத்த ரயில்வே!

  எனக்கு 3 சிறிய குழந்தைகள் உள்ளார்கள். அவர்களை காப்பதற்காக நான் உயிர் வாழ வேண்டும்" என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,புகாருக்கு ஆளான தனியார் மருத்துவமனை மருத்துவர் ஆர்கே சிங் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Bihar, Crime News, Kidney