பீகார்: வினோத சம்பவம் ஒன்றில், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஜலந்தரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலனுடன் வசித்து வந்தது போலீசார் விசாரணை அம்பலமாகியுள்ளது. அப்பெண்ணின் தந்தை, தனது மகளைக் கொலை செய்துவிட்டதாக குற்றம் சாட்டியதை அடுத்து, அப்பெண்ணின் கணவர் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சாந்தி தேவி என்ற பெண், லக்ஷ்மிபூரில் வசிக்கும் தினேஷ் ராம் என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில வருடங்கள் கழித்து, சாந்தி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தனது கணவரின் வீட்டை விட்டு வெளியேறி பஞ்சாபில் உள்ள தனது காதலனுடன் வசிக்கச் சென்றுவிட்டார்.
இதனிடையே, அப்பெண் காணாமல் போனதையடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையை அணுகி, வரதட்சணைக் கொடுமையால் அவரின் கணவர் மீது குற்றம் சாட்டியதுடன், அவர் அப்பெண்ணைக் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். காணாமல்போன பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தினேஷைக் கைது செய்து கொலைக் குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து சாந்தியின் தந்தை யோகேந்திர யாதவ் போலீஸாரிடம் கூறியதாவது, ‘எனது மகள் தினேஷ் ராம் என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஏப்ரல் 19-ம் தேதி அவளை எங்கு தேடியும் காணவில்லை என்ற தகவல் கிடைத்தது. நான் அவளின் கணவர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோதும் பலனில்லை. கடந்த ஆண்டு, என் மகளிடம் அவளுடைய மாமியார், கணவர் ஒரு பைக் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கம் வரதட்சணையாக கேட்டு சித்ரவதை செய்ததாக எங்களிடன் கூறினாள்’ என சாந்தியின் தந்தை வாக்குமூலம் அளித்தார்.
அதனடிப்படையில், தினேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர், அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க | கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடத்தில் அனுமதி மறுக்க முடியாது- உச்ச நீதிமன்றம்
இருப்பினும், காவல் அதிகாரி ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் இறந்ததாக கருத்தப்பட்ட சாந்தி தேவியின் மொபைல் போன் இருப்பிடத்தைக் கண்டறிய தொழில்நுட்பக் குழுவை வலியுறுத்தியதும் விஷயங்கள் சுவாரஸ்யமான திருப்பங்களை எடுத்தன. தொழில்நுட்ப கண்காணிப்பு உதவியுடன், இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண், உண்மையில் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் தனது காதலனுடன் வசித்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து போலீஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தப் பெண் மீண்டும் மோதிஹாரிக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bihar, Crime News