• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகாரில் காதலித்ததால் ஆண் உறுப்பு அறுத்து கொல்லப்பட்ட இளைஞர்.. காதலியின் வீட்டின் முன்பாகவே உடலுக்கு எரியூட்டிய இளைஞரின் உறவினர்கள்..

பீகாரில் காதலித்ததால் ஆண் உறுப்பு அறுத்து கொல்லப்பட்ட இளைஞர்.. காதலியின் வீட்டின் முன்பாகவே உடலுக்கு எரியூட்டிய இளைஞரின் உறவினர்கள்..

Youtube Video

காதலித்ததால் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை, காதலியின் வீட்டின் முன்பாகவே உறவினர்கள் எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Share this:
    பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே ரேபுரா ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மணிஷ் டாகுர் என்பவரின் மகன் 18 வயது சவுரப். இவர் ஒடிசாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சவுரபின் சகோதரிக்கு திருமணம் நடைபெறவிருந்ததால் சொந்த ஊருக்கு கடந்த ஜூன் மாதம் வந்தார். அதே ஊரில் வசிக்கும் காதலியை பார்க்கப் போகிறோம் என்ற இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஒடிஷாவில் இருந்து சவுரப் ஆசை, ஆசையாக ஓடிவந்தார். ஆனால் காத்திருக்கும் அபாயத்தை அவர் அப்போது அறியவில்லை.

    சகோதரிக்கு கடந்த ஒன்றாம் தேதி திருமணம் நடந்த நிலையில் மேலும் சில நாட்கள் சொந்த ஊரில் தங்கினார் சவுரப். அப்போது காதலியை சந்தித்து வந்ததால் அப்பெண்ணின் வீட்டார் கடும் கோபமடைந்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் சவுரபை கடத்திய காதலியின் வீட்டார் சித்ரவதை செய்து உடல் உறுப்புக்களை சிதைத்து, பின்னர் அவரை கொலை செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... 3வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை



    இதனால் சவுரப்பின் உறவினர்கள் கடும் கோபம் கொண்டனர். சவுரபின் உடல் சொந்த ஊருக்கு வந்தபோது அங்கு வன்முறை வெடித்தது. காதலியின் பெற்றோருக்கு பாடம் கற்பிக்க நினைத்த சவுரபின் உறவினர்களும், ஊராரும், காதலன் உடலை, காதலியின் வீட்டு முன்பே வைத்து எரித்து கோபத்தை வெளிப்படுத்தினர். அப்போது ரேபுரா ராம்பூர் கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: