• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஹால்டிக்கெட்டில் நடிகர் இம்ரான் ஹஸ்மி, சன்னிலியோன் பெயர்- பீகார் மாணவர் அதிர்ச்சி!

ஹால்டிக்கெட்டில் நடிகர் இம்ரான் ஹஸ்மி, சன்னிலியோன் பெயர்- பீகார் மாணவர் அதிர்ச்சி!

நடிகர் இம்ரான் ஹஸ்மி, சன்னிலியோன்

நடிகர் இம்ரான் ஹஸ்மி, சன்னிலியோன்

முதற்கட்ட விசாரணையில், மாணவனின் பெயர் குந்தன் குமார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மீனாப்பூர் மாவட்டத்தில் உள்ள Dhanraj Mahto Degree கல்லூரியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மி, நடிகை சன்னிலியோன் ஆகியோர் பீகார் மாணவனின் ஹால் டிக்கெட்டில் தாய், தந்தை என குறிபிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளில் உரிய நபருக்கு பதிலாக பிரபலங்களின் படங்களும்,விலங்குகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், இதற்கு உச்சபட்சமாக பீகாரில் இளங்கலை 2ம் ஆண்டு படிக்கும் மாணவனின் ஹால்டிக்கெட்டில் நடைபெற்றிருக்கும் குழப்பம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அதாவது, மாணவனின் ஹால் டிக்கெட்டில் அவரது தந்தை, பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மி என்றும், தாய் பாலிவுட் நடிகை சன்னிலியோன் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. இருப்பிட முகவரி, பாலியல் தொழிலுக்கு பெயர்பெற்ற இடமான சட்டர்புஜ் ஸ்தான் (Chaturbhuj Sthan) எனக் குறிப்பிடப்பட்டிருந்து. இதனை பார்த்த மாணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். சமூகவலைதளங்களில் வைரலான இந்த ஹால்டிகெட்டின் ஸ்கிரீன் ஷாட் பீகார் மாநில அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் காண்பிக்கப்பட்டது. 

இதனைப் பார்த்த பேராசிரியர்கள் ஹால்டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள தகவல் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு பல்கலைக்கழக பதிவாளர் ராம் கிருஷ்ண தாகூர் உத்தரவிட்டுள்ளார். ஹால்டிக்கெட் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறு எங்கு நடந்திருக்கிறது என்பதை அறிய உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், ஹால்டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள தகவலுக்கு முழுப்பொறுப்பும் மாணவன் மட்டுமே என்றும், இருப்பினும் முழுமையான விசாரணைக்குபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், மாணவனின் பெயர் குந்தன் குமார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மீனாப்பூர் மாவட்டத்தில் உள்ள Dhanraj Mahto Degree கல்லூரியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே, இணையத்தில் வைரலான மாணவனின் ஹால்டிக்கெட்டிற்கு பதிலளித்துள்ள பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸிம் "சத்தியமாக அவர் என் குழந்தை இல்லை" என விளக்கமளித்துள்ளார்.Also read... அரசின் பரிந்துரைகளை ஏற்க மறுப்பு- தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்!இதேபோல், கடந்த ஆண்டு பீகார் மாநிலத்தில் வெளியிடப்பட்ட இளநிலை பொறியாளர் முதல்நிலை தேர்வு முடிவிலும், பாலிவுட் நடிகை சன்னி லியோன் 98.5 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தில் இருப்பதாக வெளியிட பட்டியல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அம்மாநில பொதுசுகாதாரத்துறை இணை செயலாளர் அறிவித்திருந்தார்.

மேலும், சிலரின் பெயர்கள் BCXV எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. போலியானவர்களை வேலையில் அமர்த்துவதற்காக அதிகாரத்தில் இருப்பவர்கள் இத்தகைய முறைகேட்டில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது .

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: