ஐசிஐசிஐ வங்கியில் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் ரூ.8 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக் கிளைக்கு, முகமூடி அணிந்த வந்த 6 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கியை காட்டி மிரட்டி 8 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்துக் கொண்டு தப்பினர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து வங்கி மேலாளர் கோபர்சாஹி கூறுகையில், ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து வந்த 6 பேர் திடீரென வங்கிக்குள் நுழைந்தனர். அப்போது வங்கியில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்தனர். உள்ளே வந்த 6 பேர் கொண்ட கும்பல் சில நிமிடங்களில் காசாளர்களிடம் இருந்து ரூ.8,05,115 லட்சம் பணத்தையும் பாதுகாவலர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறித்துச் சென்றனர்.” என்றார்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரில் மூவர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும், இதுதொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
#WATCH Bihar: Six people, wearing helmets and covering their faces, looted Rs 8,05,115 from ICICI bank in Muzaffarpur's Gobarsahi area. They also looted a rifle of the security guard at the bank. (05.10.2019) (Source: CCTV footage) pic.twitter.com/cpnsWB6dpW
வீடியோ பார்க்க: நகைக்கடை கொள்ளையரை துரத்தும் போலீஸ் - சிசிடிவி வீடியோ
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.