• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 94 பீகார் சட்டசபை தொகுதிகளில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது..

94 பீகார் சட்டசபை தொகுதிகளில் இன்று 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது..

பீகார் தேர்தல்

பீகார் தேர்தல்

பீகாரில், 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 7-ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 10-ஆம் தேதி நடக்கிறது.

  • Share this:
    பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல், கடந்த 28-ந் தேதி நடந்தது. 2-ம் கட்ட தேர்தல், இன்று நடக்கிறது. 17 மாவட்டங்களில் அடங்கி உள்ள 94 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்த தொகுதிகளில் 2 கோடியே 85 லட்சத்து 50,285 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 1 கோடியே 50 லட்சத்து 33 ஆயிரத்து 34 பேர். பெண்கள் 1 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 271 பேர். திருநங்கையர் 980 பேர். 41,362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,463 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 1,316 பேர் ஆண்கள், 146 பேர் பெண்கள் ஆவர்.


    மகராஜ்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளர்களும், தராலி (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளர்களும் உள்ளனர்.


    ராஷ்டிரீய ஜனதாதளத்தின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், அவருடைய அண்ணன் தேஜ்பிரதாப் யாதவ், சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்கா ஆகியோர் 2-ம் கட்ட தேர்தலை சந்திப்பவர்களில் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் சொந்த கிராமம் அமைந்துள்ள ஹரானட் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது.


    பீகாரில், தேர்தல் நடக்கும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி, வாக்காளர்களுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கையுறை வழங்குதல் உள்ளிட்ட, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பீகாரில், 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 7-ஆம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 10-ஆம் தேதி நடக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: