முகப்பு /செய்தி /இந்தியா / தேர்வு அறையில் 500 மாணவிகளுக்கு மத்தியில் ஒரே ஆண்.. பதட்டத்தில் மயக்கம் போட்டு விழுந்த மாணவர்!

தேர்வு அறையில் 500 மாணவிகளுக்கு மத்தியில் ஒரே ஆண்.. பதட்டத்தில் மயக்கம் போட்டு விழுந்த மாணவர்!

மயங்கி விழுந்த மாணவர் மணி சங்கர்

மயங்கி விழுந்த மாணவர் மணி சங்கர்

500 மாணவிகளுக்கு மத்தியில் தனி ஆளாக தேர்வு எழுதிய ஒரு மாணவர் பதட்டத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பீகாரில் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

பீகார் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பீகார் ஷெரிப் பகுதியில் உள்ள அலமா இக்பால் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவர் மணிஷ் சங்கர் பிரசாத் சுந்தர்கர் பகுதியில் உள்ள பள்ளியில் பொதுத்தேர்வு எழுத சென்றுள்ளார்.

அன்று கணிதத் தேர்வு நடைபெற்றிருந்த நிலையில், மாணவர் தேர்வு மையத்திற்குள் நுழைந்து தேர்வு எழுத ஆரம்பித்துள்ளார். ஆனால், திடீரென்ற மாணவர் சங்கருக்கு படபடப்பு ஏற்பட்டுள்ளது.பதட்டத்தில் வியர்த்து போய் தேர்வு மையத்திலேயே மாணவர் மயக்கி விழுந்துள்ளார். பதறிப்போன தேர்வு கண்காணிப்பாளர் ஆம்புலன்ஸை வரவழைத்து மாணவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், மாணவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.

மாணவரின் அத்தை மருத்துவனையில் இருந்து அவரை கவனித்துக்கொள்ளும் நிலையில், ஏன் அப்படி பதறிப்போனாய், தேர்வுக்கு ஒழுங்காக படிக்கவில்லையா என விசாரித்துள்ளனர். அதற்கு மாணவர் கூறிய காரணம் தான் மிரள வைத்துள்ளது. அந்த தேர்வு மைய அறையில் இவர் ஒருவர் மட்டுமே ஆண் எனவும், மீதம் இருந்த 500 பேருமே மாணவிகள் என்பதாலும் தனக்கு பதட்டம் ஏற்பட்டதாக மாணவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

இத்தனை மாணவிகள் மத்தியில் தனி ஒரு ஆணாக தேர்வு எழுதுவதை நினைத்து தனக்கு பதட்டம் ஏற்பட்டு மயக்கமடைந்ததாக அவர் கூறியுள்ளார். தனது பிரச்சனையை மாணவர் அத்தையிடம் கூறும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வினோத காரணத்திற்காக மாணவர் மயங்கி விழுந்துள்ள இச்செய்தி டிரெண்டாகி கவனம் பெற்று வருகிறது.

First published:

Tags: Bihar, Exam, School student