• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பள்ளிகள் திறப்பு: 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப். 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பீகார் அரசு அறிவிப்பு!

பள்ளிகள் திறப்பு: 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப். 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பீகார் அரசு அறிவிப்பு!

பள்ளிகள் திறப்பு:

பள்ளிகள் திறப்பு:

மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாத மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
 

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு வரும் திங்கட்கிழமை (பிப். 8) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக பீகாரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, கொரோனா பரவல் குறைந்ததன் எதிரொலியாக மூடிக்கிடந்த பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு முடிவு செய்தது.

இதன் ஒரு அங்கமாக கடந்த மாதம் 4ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டன.

இந்நிலையில் நடுநிலை பள்ளிகளுக்கும் வகுப்புகளை தொடங்கலாம் என அம்மாநில தலைமை செயலாளர் தீபக் குமார் தலைமையில் நடைபெற்ற நெருக்கடி கால மேலாண்மை குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி பிப்ரவரி 8ம் தேதி முதல் 6 - 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாத மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50% இருக்கைகளுடன் மாணவர்களுக்கான வகுப்புகள் இயங்கும் எனவும் அனைத்து அரசு ஆசிரியர்களும் தங்களின் பள்ளிகளில் பிப் 8 அன்று இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒவ்வொரு மாணவர்களுக்கும் 2 முகக்கவசம் இலவசமாக பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது. பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுக்கு மருத்துவக் குழுவினரால் உடல் பரிசோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: