Home /News /national /

பீகாரில் ராமநவமி அன்று மசூதியில் காவிக்கொடி ஏற்றம்: மூன்றுபேர் கைது

பீகாரில் ராமநவமி அன்று மசூதியில் காவிக்கொடி ஏற்றம்: மூன்றுபேர் கைது

மசூதியில் காவிகொடி

மசூதியில் காவிகொடி

மசூதியில் காவிக்கொடி நடப்பட்டது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  முசாப்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஜெயந்த் கண்ட் தெரிவித்துள்ளார். மசூதியில் காவிக் கொடி ஏற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே போலீசார் அங்கு சென்று கொடியை அகற்றியதாகவும் தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்கவும் ...
    பீகார் மாநிலத்தில் ராமநவமி அன்று மசூதியில் காவிக்கொடி நடப்பட்ட  சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாடு முழுவதும் கடந்த ஞாயிறன்று ராம நவமி விழா இந்துக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதேவேளையில், வட மாநிலங்களில் ராமநவமி நாளில் சர்ச்சைகளும் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ராமநவமி அன்று அசைவ உணவு பரிமாறப்பட்டது தொடர்பாக இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது.

    இதேபோன்ற சம்பவம் ஒன்று பீகார் மாநிலத்திலும் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநவமியையொட்டி பலரும் காவி கொடியை கையில் ஏந்தியபடி வாகனங்களில் ஊர்வலமாக சென்றுள்ளனர். அப்போது  முசாப்பூர் பகுதியின் முகமதுபூர் கிராமத்தில் உள்ள டக் பங்களா மஸ்ஜித் அருகே வந்தபோது, இளைஞர் ஒருவர் மசூதியின் சுவர் மீது ஏறி கோபுரத்தில் காவிக்கொடியை கட்டினார்.



    அங்கிருந்தவர்கள் இந்த செயலை தடுக்காமல் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் பதற்றமான சூழலையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  முசாப்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஜெயந்த் கண்ட் தெரிவித்துள்ளார். மசூதியில் காவிக் கொடி ஏற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே போலீசார் அங்கு சென்று கொடியை அகற்றியதாகவும் தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bihar

    அடுத்த செய்தி