Home /News /national /

வேலை செய்யாமல் சம்பளம் வாங்க மனம் உறுத்துகிறது - ரூ.24 லட்சத்தை திரும்பி தந்த பேராசிரியர்

வேலை செய்யாமல் சம்பளம் வாங்க மனம் உறுத்துகிறது - ரூ.24 லட்சத்தை திரும்பி தந்த பேராசிரியர்

ரூ.24 லட்சம் சம்பளத்தை திருப்பித் தந்த லாலன் குமார்

ரூ.24 லட்சம் சம்பளத்தை திருப்பித் தந்த லாலன் குமார்

எனது ஆசிரியர் பணியை முறையாக செய்யாமலேயே சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டால், அது எனது தொழிலையே கொலை செய்ததற்கு சமமாகும் என ஆசிரியர் லாலன் கூறியுள்ளார்.

    பீகார் மாநிலத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட சம்பளத் தொகையான ரூ.24 லட்சத்தை திருப்பித் தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பீகார் மாநிலம் நிதிஷ்வர் கல்லூரியில் பணியாற்றி வருபவர் லாலன் குமார். இந்த கல்லூரியானது பீகார் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

    இவர் தனது முதுகலை பட்டத்தை ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில், எம்பில், முனைவர் படிப்பை டெல்லி பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். இந்நிலையில் பீகாரின் நிதிஷ்வர் கல்லூரியில் இவர் பேராசிரியராக உள்ளார். இந்த கல்லூரியில் 3000 மாணவர்கள் படித்துவருகின்றனர். இதில் 1,110 மாணவர்கள் ஹிந்தி பாடம் படிக்கின்றனர். 2020ஆம் ஆண்டு கோவிட் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் நேரடி வகுப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன.

    ஆன்லைன் மூலம் சில வகுப்புகள் பின்னர் நடைபெற்றாலும், லாலன் குமாரின் இந்தி வகுப்புக்கு மிகக் குறைவாகவே மாணவர்கள் கற்க வந்ததாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தான் தனது ஆசிரியர் தொழிலை முறையாக செய்யாமலேயே தனது சம்பளத்தை பெறுவது மனதுக்கு உறுத்தலாக இருந்ததாக கூறும் லாலன், முறையாக வேலை செய்யாமல் பெற்ற சம்பளத்தை தான் வைத்துக்கொள்ள வேண்டாம் என முடிவெடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து தனது 33 மாத சம்பளத்தை கணக்கிட்டு அதன் தொகையான ரூ.23,82,228ஐ பல்கலைக்கழக பதிவாளரிடம் திருப்பித் தந்துள்ளார்.

    ஆசிரியரின் இந்த செயல் அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது முடிவு குறித்து லாலன் குமார் கூறுகையில், எனது மனதின் பேச்சைக் கேட்டே இந்த முடிவை நான் எடுத்தேன். எனது ஆசிரியர் பணியை முறையாக செய்யாமலேயே சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டால், அது எனது தொழிலையே கொலை செய்ததற்கு சமமாகும் எனக் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: நாட்டின் முதல் மூன்றாம் பாலின விமானியின் பறக்கும் கனவு உடைந்தது..

    நாடு முழுவதும் கோவிட் காலத்தில் மாணவர்களின் கல்வி வெகுவான பாதிப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் அதில் மாணவர்களின் பங்கேற்பு சதவீதம் மிகக் குறைவாகவே உள்ளது. இந்த சூழலில், ஆசிரியர் ஒருவர் கடைமையே என்று சம்பளத்தை வாங்கிக்கொண்டு வாழாமல், தான் செய்த வேலை திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி ரூ.24 லட்சத்தை திருப்தி தந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bihar, Salary

    அடுத்த செய்தி