ஹோம் /நியூஸ் /இந்தியா /

பீகார் தேர்தல் : காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - ராகுல் காந்தி சூளுரை

பீகார் தேர்தல் : காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் - ராகுல் காந்தி சூளுரை

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

அராரியா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பீகாரில் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமாக இருந்தாலும், மோடியின் வாக்கு இயந்திரமாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றிபெறும் என்று ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.

  243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப் பேரவைக்கு, மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, நர்கதியாகஞ்ச் (Narkatiaganj) பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு வாக்கு சேகரித்தார்.  இதையடுத்து, லாரியாவில் (Lauria) நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர், கொரோனா காலத்தில் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் டெல்லியில் தஞ்சமடைந்ததாக குறிப்பிட்டார். எனவே, அப்படிப்பட்டவர்கள், பீகார் மங்களுக்காக களத்தில் இறங்கி என்ன செய்யப்போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

  இதனிடையே, அராரியா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். அப்போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டிய ராகுல், மோடி வாக்கு இயந்திரத்தை கண்டும் அச்சப்பட மாட்டோம் என்று சூளுரைத்தார்.

  மூன்றாவது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது. இதனால், அனைத்துக் கட்சிகளிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 7-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பின், நவம்பர் 10-ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகவுள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Bihar Election 2020, Rahul gandhi