Home /News /national /

பீகாரில் நிதீஷ் குமார் - பாஜக கூட்டணி முறிவு: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார்

பீகாரில் நிதீஷ் குமார் - பாஜக கூட்டணி முறிவு: இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார்

பீகார் அரசியலில் திருப்பம்

பீகார் அரசியலில் திருப்பம்

பாஜகவிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியே வந்தால் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் தனியே ஆலோசனை நடத்தி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bihar, India
    பீகாரில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுநரை சந்திக்க முதலமைச்சர் நிதிஷ் குமார் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பீகாரில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும் பாஜக மேலிடத்திற்கும் அண்மைக்காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. பாஜக ஏற்பாடு செய்யும் ஆலோசனைக் கூட்டங்களையும் பிரதமர் மோடியுடனான சந்திப்பையும் கடந்த சில மாதங்களாக நிதிஷ் குமார் தவிர்த்து வருகிறார். குறிப்பாக குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா முதல் நிதி ஆயோக் கூட்டம் வரை, 3 வாரங்களில் மத்திய அரசின் நான்கு முக்கிய நிகழ்ச்சிகளை நிதிஷ் குமார் புறக்கணித்தார்.

    இதனால், பாஜக உடனான கூட்டணியில் இருந்து அவர் வெளியேற உள்ளதாக கூறப்படும் நிலையில், சோனியா காந்தியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சந்திக்க நேரம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சூழ்நிலையில் முதலமைச்சர் நிதிஷ் குமார், தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது அலைபேசிகளை வெளியே வைத்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    இதனிடையே ஆளுநரை சந்திக்க நிதிஷ் குமார் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்ற நிலையில், பாஜக-வுக்கு 77 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதாதளத்துக்கு 45, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு 9 உறுப்பினர்கள் உள்ளனர். இதேபோல, ராஷ்ட்ரிய ஜனதாதளத்துக்கு 79, காங்கிரஸுக்கு 19 மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு 16 உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிக்க: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் பாத யாத்திரை: ராகுல் காந்தி பங்கேற்கிறார்

    பாஜகவிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியே வந்தால் ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் தனியே ஆலோசனை நடத்தி வருகிறது. கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத்தின் இல்லத்தில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் செல்போன்களை பாதுகாப்பு அதிகாரியிடம் கொடுத்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அம்மாநில காங்கிரஸும் நிதீஷ் கட்சிக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனிடையே,  துணை முதலமைச்சர் தர்கிஷோர் பிரசாத் இல்லத்தில் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அவர்களை டெல்லி வருமாறு பாஜக மேலிடம் அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    பாஜகவுடனான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நிதீஷுக்கு ஆதரவு அளிக்க தேஜஸ்வி யாதவ் தயாராக இருப்பதாகவும் தங்கள் கட்சிக்கு உள்துறை அமைச்சர் பதவி மற்றும் சபாநாயகர் பதவியை அவர் கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bihar, Lalu prasad yadav, Nitish Kumar

    அடுத்த செய்தி