கொரோனா தொற்றால் உயிரிழந்த புது மாப்பிள்ளை... கிராமத்தினர் 100 பேருக்கு வைரஸ் தொற்று..

பிகார் மாநிலத்தில் கொரோனாவால் இறந்த புதுமாப்பிள்ளையின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நூறு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்த புது மாப்பிள்ளை... கிராமத்தினர்  100 பேருக்கு வைரஸ் தொற்று..
மாதிரிப் படம்
  • Share this:
பாட்னாவில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலிகஞ்ச் கிராமத்தை சேர்ந்த இளைஞர், குருகிராமில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஜூன் 15ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, மே மாத இறுதியில் சொந்த ஊர் திரும்பிய இளைஞருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதால், திருமணத்தை ஒத்திவைக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கு சம்மதிக்காத குடும்பத்தினர் பாரசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொண்டு திருமணத்திற்கு தயாராகுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பின்னர் திட்டமிட்டபடி ஜூன் 15ம் தேதி இளைஞருக்கு திருமணம் முடிந்த நிலையில், இரண்டு நாட்களில் உடல்நிலை மோசமடைந்ததால் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும் உயிரிழந்தார்>. அப்போது, சுகாதாரத்துறையினருக்கு தெரிவிக்காமல் இளைஞரின் உடலை குடும்பத்தினர் எரியூட்டியுள்ளனர்.

உள்ளூரை சேர்ந்த ஒருவர் மாஜிஸ்திரேட்டிற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, இளைஞரின் நெருங்கிய உறவினர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், 15 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பலிகஞ்ச் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தி 364 நபர்களின் மாதிரிகளை சேகரித்தனர். அதில், 86 பேருக்கு தொற்று உறுதியானது.அவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறியே இல்லாததால் முகாம்களில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இளைஞரின் திருமண நிகழ்ச்சியில் தொடர்புடைய சுற்றுவட்டார கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

 
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading