Home /News /national /

திருடனை ரயில் ஜன்னல் கம்பியில் தொங்கவிட்ட பயணிகள்.. 15 கிமீ தூரம் கெஞ்சி கதறிய திருடன்

திருடனை ரயில் ஜன்னல் கம்பியில் தொங்கவிட்ட பயணிகள்.. 15 கிமீ தூரம் கெஞ்சி கதறிய திருடன்

திருடனை ஜன்னல் கம்பியில் தொங்கவிட்ட மக்கள்

திருடனை ஜன்னல் கம்பியில் தொங்கவிட்ட மக்கள்

பீகார் மாநிலத்தில் செல்போன் திருடனை பொதுமக்கள் ஓடும் ரயிலின் ஜன்னலில் தொங்கவிட்டு 15 கீமீ அழைத்து வந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bihar, India
    பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் இருந்து காகாரியா பகுதிக்கு பயணிகள் ரயில் வழக்கம் போல் சென்றுள்ளது. இந்த ரயில் சஹேப்பூர் கமல் என்ற ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த பங்கஜ் குமார் என்ற நபர் பயணிகளிடம் வழிபறி செய்து வந்துள்ளார்.

    பெகுசராய் பயணிகள் ரயில் சஹேபூர் ரயில் நிலையம் வந்த நிலையில் அங்கிருந்த பயணிகளை நோட்டமிட்ட பங்கஜ், ஒருவரின் செல்போன் மீது கண் வைத்து அதை திருடிவிட வேண்டும் என பிளான் செய்துள்ளார். இதையடுத்து ரயில் மெல்ல கிளம்பும் நேரம் பார்த்து பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பங்கஜ் ஜன்னல் வழியாக ரயிலுக்குள் இருந்த பயணியின் செல்போனை திருட முயற்சித்துள்ளார். இதை கவனித்த அந்த பயணி அந்த ஜன்னல் வழியாக வந்த திருடனின் கையை பிடித்துக்கொண்டார். அதற்குள் ரயில் நகர ஆரம்பித்துவிட்டது. மாட்டிக்கொண்ட திருடன் பங்கஜ் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்க சரி நம்மை விட்டால் போதும் என நினைத்துள்ளார்.

    ஆனால் பங்கஜ்-க்கு ஷாக் கொடுக்கும் விதமாக மற்ற பயணிகளும் சேர்த்து அவரின் கையை கெட்டியாக பிடித்துக்கொள்ள ரயிலும் ரயில் நிலையத்தை தாண்டிவிட்டது. அய்யோ உயிருக்கே ஆபத்தாகி விடப் போகிறது என்ற பயத்தில் தனது மற்றொரு கையையும் ஜன்னுக்குள் விட்டு கெட்டியாக பிடித்து ஓடும் ரயிலில் அந்தரத்தில் தொங்கியுள்ளார். வலிக்கிறது என் கை உடைந்துவிடும் என எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பயணிகள் கையை விடுவதாக இல்லை.


    சுமார் 15 கிமீ தூரம் அந்த பயணியை தொங்கவிட்டு அழைத்து வந்து அடுத்த ரயில் நிலையமான காகாரியா வந்த பின் தான் கையை விடுவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஹரப்பா கலாச்சாரதை பறைசாற்றும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ராக்கிகர்ஹியில் உருவாகிறது!

    ஜன்னல் கம்பியில் அந்த நபர் தொங்கிய படி கெஞ்சி கதறும் வீடியோவை பயணி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில், பங்கஜ் குமாரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Bihar, Thief, Viral Video

    அடுத்த செய்தி