Home /News /national /

போலீசாரை திட்டிய அமைச்சர்.. சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என மிரட்டல் - வீடியோ

போலீசாரை திட்டிய அமைச்சர்.. சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என மிரட்டல் - வீடியோ

Viral Video

Viral Video

அமைச்சரின் காரை தடுத்ததால், போலீசாருக்கும், அமைச்சருக்கும் இடையேயான விவகாரத்தினால் சட்டமன்ற வளாகம் பரபரப்பாக மாறியது.

பீகாரில் பொறுமையிழந்த அமைச்சர் ஒருவர் போலீசாரை நோக்கி ஆவேசமாக பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தனது காரை வழிமறித்து தடுத்த போலீசாரை திட்டிய அமைச்சர் ஒருவர், இந்த செயலுக்காக போலீசாரை சஸ்பென்ட் செய்துவிடுவேன் என மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த ஜிவேஷ் மிஸ்ரா இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக சென்ற போது சட்டமன்றத்தின் நுழைவு வாயிலில் போலீசார் அமைச்சரின் காரை தடுத்ததாக கூறப்படுகிறது.



மாவட்ட காவல்துறை எஸ்.பி மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோரின் கார்கள் சட்டமன்றத்தின் உள்ளே செல்வதற்காக தனது காரை தடுத்து நிறுத்தியதாக கூறி காரை விட்டு வெளியேறிய அமைச்சர் ஜிவேஷ் மிஸ்ரா, போலீசாரை நோக்கி ஆவேசமாக கூச்சல் போட்டார்.

Also read:   டெல்லியில் தாய், மகள் மீது கொடூர தாக்குதல் - பகீர் காட்சிகள்

அமைச்சரான தனது காரையே சட்டமன்றத்தில் நுழையவிடாமல் தடுக்கிறீர்களா? உங்கள் எஸ்.பி, நீதிபதி நுழைய என் காரை காக்க வைப்பீர்களா என அவர் போலீசாரை நோக்கி ஆவேசமாக கேள்வி கேட்டார். அங்கு செய்தியாளர்கள் சூழ்ந்து இருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. மேலும் தன் காரினை தடுத்து நிறுத்திய காவலர்களை சஸ்பெண்ட் செய்யும் வரை சட்டமன்றத்தில் நுழையமாட்டேன் எனவும் நான் தான் அரசாங்கம், என்னையே தடுத்து நிறுத்துகிறார்கள் என அமைச்சர் ஜிவேஷ் பேசினார்.

அமைச்சரின் காரை தடுத்ததால், போலீசாருக்கும், அமைச்சருக்கும் இடையேயான விவகாரத்தினால் சட்டமன்ற வளாகம் பரபரப்பாக மாறியது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னர் சில மாதங்களுக்கு முன்னர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் மதன் சாஹ்னியுடன், அமைச்சர் ஜிவேஷ் மிஸ்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்டது தலைப்புச் செய்தியானது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Trending, Viral Video

அடுத்த செய்தி