Home /News /national /

தனது வீட்டின் அருகில் அடிபட்டு விழுந்து கிடந்த அரிய வகை அமெரிக்க ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைத்த நபர்!

தனது வீட்டின் அருகில் அடிபட்டு விழுந்து கிடந்த அரிய வகை அமெரிக்க ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைத்த நபர்!

 அடிபட்டு விழுந்து கிடந்த அரிய வகை அமெரிக்க ஆந்தை

அடிபட்டு விழுந்து கிடந்த அரிய வகை அமெரிக்க ஆந்தை

அரிய வகை ஆந்தை ஒன்று பீகார் மாநிலத்தில் உள்ள சுபாவுல் கிராமத்தை சேர்ந்த ராகுல் குமார் என்பவரது வீட்டின் அருகே அடிபட்டு கீழே விழுந்து கிடைத்துள்ளது.

பல நேரங்களில் மனிதர்களிடம் மனிதாபிமானம் இல்லையோ என்கிற அளவுக்கு மிக கொடூரமான சம்பவங்கள் தினம்தோறும் நடந்து கொண்டு வருகிறது. இதற்கு மாறாக மறுபுறம் பல நல்ல செயல்களும் நிகழ்கிறது. அந்த வகையில் மனிதர்களிடம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்ற மிக முக்கியமான குணம், பிறருக்கு உதவும் மனப்பான்மை தான். தனக்கு சற்றும் முன் பின் தெரியாத நபருக்கு உதவுவதில் இருக்க கூடிய ஆனந்தமே தனி.

அதே போன்று முன்பின் தெரியாத நபரிடம் இருந்து நமக்கு கிடைக்கும் உதவி சிறிதாக இருந்தாலும் அதை நாம் மிக பெரிய ஒன்றாக நினைத்து போற்ற வேண்டும். மனிதர்களுக்கு உதவுவதே இந்த அளவிற்கு சிறப்பு என்றால், விலங்குகள், பறவைகள் போன்ற பிற உயிர்களுக்கு உதவுவது அதை விடவும் சிறப்பானது. இப்படியொரு சிறந்த செயலை தான் பீகாரை சேர்ந்த ஒரு நபர் பறவை ஒன்றிற்கு உதவி உள்ளார். அமெரிக்கா நாட்டில் சில வகை பறவை இனங்கள் மிகவும் அரிய வகையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இப்படிப்பட்ட ஒரு அரிய வகை ஆந்தை ஒன்று பீகார் மாநிலத்தில் உள்ள சுபாவுல் கிராமத்தை சேர்ந்த ராகுல் குமார் என்பவரது வீட்டின் அருகே அடிபட்டு கீழே விழுந்து கிடைத்துள்ளது. இதை பார்த்த அவர் உடனே அந்த ஆந்தையை அங்கிருந்து தனது வீட்டிற்குள் எடுத்து சென்றுள்ளார். பிறகு அதற்கு அடிபட்டுள்ளதை அறிந்து கொண்டு உடனே அதை பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த ஆந்தை பார்ப்பதற்கு சாதாரண ஆந்தை போன்று இல்லை என்பதால் உடனடியாக அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



பிறகு அந்த மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ராகுலிடம் இருந்து அந்த அரிய வகை ஆந்தையை வாங்கி சென்று தகுந்த முதல் உதவிகளை செய்துள்ளனர். மேலும் ராகுல் குமார் செய்த இந்த நல்ல உதவிக்கு வனத்துறையினர் நன்றியும் தெரிந்து கொண்டனர். பிறகு அந்த ஆந்தையை பற்றி ஆய்வு செய்த போது அது அமெரிக்காவில் காணப்படும் பார்ன் (Barn Owl) என்கிற அரிய வகை ஆந்தை இனத்தை சேர்ந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.



பொதுவாக பறவைகள் இடம்பெயர்தல் காரணமாக இது போன்று ஒரு நாட்டில் இருந்தோ அல்லது கண்டம் விட்டு கண்டம் பறந்தோ இடம் பெயர்தல் செய்யும். அது போன்று ஐரோப்பிவில் இருந்து வடகிழங்கு இந்தியாவிற்கு பல பறவைகள் தட்பவெப்ப நிலையை பொறுத்து இடம் பெயரும். இந்த ஆந்தையும் இடம்பெயர்தல் செய்யும்போது தவறுதலாக அடிபட்டு இங்கு விழுந்து விட்டது என்று வனத்துறை அதிகாரியான சுனில் குமார் சரண் கூறினார்.

ALSO READ |  இறந்த பின்னரும் பாம்பினை துன்புறுத்தி ஸ்கிப்பிங் விளையாடிய இளைஞர் - வைரலாகும் வீடியோ

ஆந்தையை இந்து மதத்தில் லட்சுமி தேவியின் சின்னமாக வணங்கி வருகின்றனர். எனவே இந்த ஆந்தையின் மூலம் செல்வம் பெருகும் வாய்ப்பு உள்ளது என்று மக்கள் கருதுகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Bihar

அடுத்த செய்தி