முகப்பு /செய்தி /இந்தியா / இப்படியா பழிவாங்குறது.. கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த மனைவி - ஓடிப்போன நபரின் மனைவியை திருமணம் செய்த கணவர்

இப்படியா பழிவாங்குறது.. கள்ளக்காதலனுடன் ஓட்டம்பிடித்த மனைவி - ஓடிப்போன நபரின் மனைவியை திருமணம் செய்த கணவர்

மீண்டும் திருமணம் செய்த நீரஜ்

மீண்டும் திருமணம் செய்த நீரஜ்

பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் தனது மனைவியுடன் ஓடிப்போன காதலனின் மனைவியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

பொதுவாக திருமணத்தை மீறிய கள்ளக்காதல் உறவு வெட்டு குத்து கொலை போன்றவற்றில் தான் முடிந்து பார்த்திருப்போம். ஆனால், பீகார் மாநிலத்தில் இப்படி ஒரு கள்ளகாதல் விவகாரம் மற்றொரு திருமணத்தில் போய் முடிந்துள்ளது.

பீகார் மாநிலம்  ககாரியா மாவட்டத்தின் ஹர்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் நீரஜ். இவரின் மனைவி ரூபி, இவருக்கு 2009ஆம் ஆண்டு ரூபி தேவி என்ற பெண்ணுடன் திருமணம் ஏற்பட்டுள்ளது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இவர்களின் திருமண வாழ்வில் பெரும் குழப்பம் வெடித்தது.

நீரஜ்ஜின் மனைவி ரூபி திருமணத்திற்கு முன்னர் பஸ்ராஹா என்ற கிராமத்தில் வசித்து வந்தார். அப்போது ரூபிக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் முகேஷ்சுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த உறவானது ரூபியின் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்துள்ளது. அதேவேளை, முகேஷ்-க்கும் திருமணமாகி அவருக்கு 4 குழந்தைகள் பிறந்துள்ளன.

இப்படி இருக்க, திருமணத்திற்கு பின்னரும் உறவை தொடர்ந்த முகேஷ் மற்றும் ரூபி கடந்தாண்டு வீட்டை விட்டு வெளியேறி வாழத்தொடங்கியுள்ளனர். முகேஷ் வீட்டை விட்டு வெளியேறும் போது மூன்று குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளார்.

தனது மனைவி பிரிந்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நீரஜ், சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். மேலும், பிரச்சனைக்கு தீர்வு காண கிராமத்தில் பஞ்சாயத்துகளும் நடத்தப்பட்டன. ஆனால், என்ன செய்தாலும், முகேஷ் நீரஜின் மனைவியுடனே சேர்ந்து வாழ்ந்துவந்துள்ளார்.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியைப் பார்க்க வந்த ராணுவ வீரர்... சுட்டுக்கொன்ற மாவோயிஸ்ட்.. இதுதான் முதல்முறை..!

பொறுத்திருந்து பார்த்த நீரஜ் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்தார். முகேஷின் மனைவியுடன் பேசி பழகி தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். நாளடைவில் இருவரும் மனம் ஒத்துப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஊர் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணமானது கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால் முகேஷின் முதல் மனைவியின் பெயரும் ரூபி தான்.

முகேஷ் இடம் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது புது ஜோடியாக உள்ள நீரஜிடமும் மூன்று குழந்தைகள் உள்ளன.பழிக்குப் பழி வாங்கும் விதமாக தனது மனைவியை பிரிந்து சென்ற முகேஷின் மனைவியையே நீரஜ் திருமணம் செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Bihar, Marriage