ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண்ணின் காது, மார்பகம், கை, கால்கள் என தனித்தனியாக வெட்டி வீசிய கொடூரன்- பட்டப்பகலில் மார்க்கெட்டில் நடந்த கொடூரம்!

பெண்ணின் காது, மார்பகம், கை, கால்கள் என தனித்தனியாக வெட்டி வீசிய கொடூரன்- பட்டப்பகலில் மார்க்கெட்டில் நடந்த கொடூரம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பைரபைன்டி சந்தையில் இறைச்சி வெட்டும் கத்தியால் மார்பகம், கைகள், கால்கள் மற்றும் காதுகளை வெட்டியதால் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Bihar |

டெல்லியில் ஷரதா என்ற இளம் பெண் பல துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், அதேபோல மற்றொரு அதிர்ச்சி சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் அருகே ஸோட்டி டெயிலோரி கிராமத்தைச் சேர்ந்தவர் அஷோக் யாதவ். இவரது மனைவியின் பெயர் நீலம் தேவி. நீலம் தேவி கடந்த சனிக்கிழமை அன்று அருகில் உள்ள சந்தைக்குப் பொருட்களை வாங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கே வந்த மர்ம நபர் ஒருவர், நீலம் தேவியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு குற்றவாளி தப்பித்துள்ளார். முன்னதாக அந்த மர்ம நபர் ஒரு பானைக்குள் இறைச்சி வெட்டும் ஆயுதத்தை மறைத்து வைத்திருந்ததாகவும், நீலம் தேவியை பார்த்ததும் அதை எடுத்து  மார்பகம், கைகள், கால்கள் மற்றும் காதுகளை வெட்டியதால் நீலம் தேவி அந்த இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை அடையாளம் கண்டு சம்பவம் குறித்து அவரது கணவர் அசோக் யாதவிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து படுகாயமடைந்த பெண் மாயாகஞ்ச் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையும் படிங்க: வயிற்றைக்கிழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி... உதவி செய்யாமல் வீடியோ எடுத்த மக்கள் !

இந்தக் கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர் முகமது ஷகீல் என அடையாளம் காணப்பட்டார். இருப்பினும்  குற்றம் சாட்டப்பட்ட ஷகீல் இன்னும் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், கொலையாளி ஷகீலுடன் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் என் மனைவியிடம் சிறிது நாட்களுக்கு முன்பு தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றான். அதனால் வீட்டிக்கு வரக் கூடாது என எச்சரித்து அனுப்பினோம். என்றும் கூறியிருந்தோம் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீலம் தேவி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ள நேரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் இல்லாததால், வீட்டிற்கு நடந்து செல்ல முடிவு செய்தாள். ஷேக் ஷகில் அவளைத் தனியாகப் பார்த்ததும், சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, பின்னால் இருந்து கூர்மையான ஆயுதத்தால் அவளை சரமாரியாக வெட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

First published:

Tags: Bihar, Murder