பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் ஏற்கனவே மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் அம்மாநிலத்தில் கள்ளச்சாராயத்தின் விற்பனையும் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
கள்ளச்சாராயம் குடித்து மாநில மக்கள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலாரப்படி 50 பேர் கள்ளச்சாராயத்தால் இறந்துள்ளனர். இதனை கண்டித்து எதிர்க்கட்சியான பாஜக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டம் சாப்ரா பகுதியில் சிலர் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். பின்னர் வீடு திரும்பிய அவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 39 பேர் உயிரிழந்தனர்.
மேலும் நிலைமை கவலைக்கிடமாக இருந்த 11 பேர் நேற்றைய இனம் உயிரிழந்ததை அடுத்து மொத்தம் கள்ளசாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க : ராஜஸ்தானில் விற்கப்பட்ட பாகிஸ்தானின் மாட்டிறைச்சி சாக்லெட்.?!
இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை, மது அருந்தினால் மக்கள் இறந்துவிடுவார்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதே நேரத்தில் மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வருவது தனது "தனிப்பட்ட விருப்பம்" அல்ல. மாநில பெண்களுக்காகவே கொண்டுவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கு கள்ளச்சாரயத்தை விற்பனை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த 31 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
வியாழக்கிழமை, சரண் மாநில ஆட்சியர் ராஜேஷ் மீனா, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 48 மணி நேரத்தில் மாவட்டத்தில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் 126 ஹூச் வியாபாரிகள் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். 4,000 லிட்டருக்கும் அதிகமான சட்டவிரோத மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான பாஜக கையில் எடுத்து ஆளுங்கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் சட்டசபையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.