11 வயது மாணவி பலாத்காரம்: தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை

11 வயது மாணவி பலாத்காரம்: தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனை

மாதிரிப்படம்

முக்கியக் குற்றவாளி, பள்ளி தலைமையாசிரியராக இருந்த அரவிந்த் குமாருக்கு தூக்கு தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 • Share this:
  ஐந்தாம் வகுப்புப் படித்து வந்த, 11 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தலைமை ஆசிரியருக்கு மரண தண்டனையும், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

  2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பீகார் மாநிலம் புல்வாரி ஷரீப் பகுதியில் இயங்கி வந்த பள்ளிக்கூடம் ஒன்றில், 5 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யபட்டார். உடல் நலக் குறைவு காரணமாக மானவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரியவந்தது.

  இது குறித்து, சிறுமியிடம் மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளி தலைமையாசிரியரும், ஆசிரியரும் பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

  இது குறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு பாட்னா சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

  இந்நிலையில், நீதிபதி அவதேஷ் குமார் பிறப்பித்த உத்தரவில், மாணவி பலாத்கார வழக்கில் முக்கியக் குற்றவாளி, பள்ளி தலைமையாசிரியராக இருந்த அரவிந்த் குமாருக்கு தூக்கு தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

  Must Read : கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 32 பேர் உயிரிழப்பு

   

  மற்றொரு குற்றவாளியான, ஆசிரியர் அபிஷேக் குமாருக்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
  Published by:Suresh V
  First published: