முகப்பு /செய்தி /இந்தியா / தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்து நீதி கேட்ட மாணவி

தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை வீடியோ எடுத்து நீதி கேட்ட மாணவி

தனக்கு நேரும் அநீதியை பொறுக்க முடியாத அந்த மாணவி, தனது தந்தை தன்னை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கும் போது அதை அவருக்கே தெரியாமல் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நீதி கேட்டுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

பிகார் மாநிலத்தில் பள்ளி மாணவி ஒருவர் தனது தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் வீடியோவை மாணவியே பதிவு செய்து வெளியிட்ட அதிர்ச்சிக்குரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிகார் மாநிலம் சமஸ்டிபூரில் உள்ள ரோசேரா என்ற பகுதியைச் சேர்ந்த நபர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 18 வயதான மகள் உள்ள நிலையில், அந்த பெண்ணை அவரது தந்தையே பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி துன்புறுத்தும் அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடைபெற்றுள்ளது. தனக்கு நேரும் அநீதியை பொறுக்க முடியாத அந்த மாணவி, தனது தந்தை தன்னை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கும் போது அதை அவருக்கே தெரியாமல் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நீதி கேட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிய நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த டிஎஸ்பி சஹியார் அக்தார், பெண்ணின் புகாரை ஏற்று வழக்கு தொடர்ந்து எப்ஐஆர் பதிவிட்டுள்ளார்.குற்றம் புரிந்த அந்த மாணவியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சட்ட ரீதியாக தண்டனை பெற்று தர காவல்துறை உறுதி பூண்டுள்ளது என்றார். மேலும் இந்த குற்றச் சம்பவத்தில் வேறு நபர்களும் உடந்தையாக உள்ளார்களா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: கணவரின் சொத்தில் இரண்டாவது மனைவிக்கு பங்கு உண்டா? - சட்ட வல்லுநர்களின் பதில் இதுதான்!

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயரும், பெண்ணிண் மாமாவும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக முதற்கட்ட விசரணையில் தெரியவந்துள்ளது.

First published:

Tags: Bihar girl, Rape case