ரயிலில் சிலர் திருடுவதை நாம் கேள்விப்பட்டிக்கிறோம். ஆனால் பீகாரில் ரயில் எஞ்சினையே ஒரு கும்பல் ஆட்டையைப் போட்டுள்ளது. இது போன்ற இன்னும் பல சுவையான திருட்டு சம்பவங்கள் பீகாரில் அரங்கேறியுள்ளன.
நாடு முழுவதும் கடுமையான வேலை செய்பவர்களை கூப்பிட்டு நீங்கள் எந்த மாநிலம் எனக் கேட்டால் 60 விழுக்காட்டிற்கு மேல் பீகார் என்பார்கள். தொழில் வளர்ச்சி உள்ளிட்ட எதுவுமே அங்கு இல்லாததால் பீகார் மக்கள் மிகவும் வறுமையில் வாழ்கிறார்கள். அதனால் தான் வேலை தேடி வெளிமாநிலங்களுக்குச் சென்று விடுகிறார்கள் அங்குள்ள மக்கள்.
உடம்பு வளைந்து வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் அங்கேயே திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்கள். அப்படி திருட்டு தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கூறிய வாக்கு மூலத்தைக் கேட்டு ஆடிப்போயுள்ளனர் காவல்துறையினர்.
அப்படி என்னதான் சொன்னார்கள் எனக் கேட்கிறீர்களா?பரௌஹ்னி நகரில் க்ரஹாரா ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு ரயில் டீசல் எஞ்சினையே பார்ட் பார்ட்டாக கழற்றி திருடிச் சென்றுள்ளது அந்தக் கும்பல். ரயில் நிலையத்தின் அருகில் பயன்பாடற்ற சுரங்கப்பாதை ஒன்று இருந்துள்ளது. அதன் வழியாக ஹாயாக கடத்தியிருக்கிறார்கள். அதையும் முசாபர் நகரில் உள்ள ஒரு காயலான் கடையில் விற்றிருக்கிறார்கள். அவர்களை அழைத்துச்சென்று ரயில் எஞ்சினின் பாகங்களை மீட்டுள்ளனர் காவல்துறையினர்.
இதே போன்று மற்றொரு ருசிகரமான சம்பவம் பீகாரில் உள்ள புர்னியா மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ரயில் நிலையத்தில் ஒரு பழமையான நீராவி ரயில் எஞ்சின் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த எஞ்சினை போலியான கடிதம் மற்றும் ஆவணங்கள் மூலம் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார் அதே ரயில் நிலையத்தில் பணியாற்றும் ரயில்வே எஞ்சினியர் ஒருவர். இது உங்கள் சொத்து என ரயிலில் எங்காவது எழுதியிருந்ததோ என்னவோ?...
இதென்ன பிரமாதம்.. இன்னும் ஸ்பெஷல் அயிட்டம் இருக்கிறது… நீங்கள்லாம் என்ன பாஸ் ரயிலை திருடுறீங்க…நாங்க ரயில்வே பாலத்தையே திருடுவோம் என கெத்து காட்டியிருக்கிறது இன்னொரு கும்பல்.. ராணிகஞ்ச் மாவட்டத்தில் பால்டானியா என்ற ரயில்வே பாலம் கடந்த 45 ஆண்டுகளுாக இருக்கிறது. 500 டன் இரும்பு பொருட்களால் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் இருந்து தான் இரும்பு பொருட்களை கொள்ளையடித்திருக்கிறது ஒரு கும்பல்.
அதுவும் மக்கள் நடமாட்டம் இருக்கும் பகல் வேளையிலேயே பாலத்தை ரிப்பேர் பார்ப்பது போல பக்காவாக நாடகமாடி இரும்பு பொருட்களை கொள்ளையடித்திருக்கிறார்கள். பாலம் கொஞ்சம் கொஞ்சமாக வீக் ஆவதை தெரிந்த பின்னரே சுதாரித்திக்கிறது போலீல். இப்போது பாலத்திற்கு காவல் போட்டிருக்கிறார்கள் போர்பஸ்கஞ்ச் காவல்நிலைய போலீசார். அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கும் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருவதாகவும் பரிதாபமாக கூறுகிறார்கள் காவல்துறையினர்.
செய்தியாளர்: ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.