Home /News /national /

Bihar Exit Poll | அதிக இடங்களைப் பெறும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி

Bihar Exit Poll | அதிக இடங்களைப் பெறும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி

ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்

ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்

பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி மெகா கூட்டணி பெரும்பான்மையைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துவருகின்றன.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம், பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் இருந்துவருகிறது. ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்தநிலையில், பீகாரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இன்றுடன் வாக்குப் பதிவு நிறைவு பெற்றது. இந்தியாவில் கொரோனா தாக்கத்துக்குப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. மேலும், பீகாரைப் பொறுத்தவரை ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் சிறைக்குச் சென்றிருக்கும்நிலையில், அவருடைய மகன் தேஜஷ்வி யாதவ் தலைமையில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலுள்ள கட்சிகளை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலை எதிர்கொள்கின்றனர்.

    இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில் தேசிய ஊடங்கள் அனைத்தும் தங்களது கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. தற்போது வெளியான கருத்துக் கணிப்புகளின்படி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி அதிக இடங்களைப் பெறும் என்பது கணிக்கப்பட்டுள்ளது.

    டைம்ஸ் நௌ சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி ஜனதா தளம் கூட்டணி 116 இடங்களையும், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 120 இடங்களையும் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரிபப்ளிக் கருத்துக் கணிப்பின்படி, ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணி 118-138 இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    ஏ.பி.பி கணிப்பின்படி ராஷ்டிரியா ஜனதா தளக் கூட்டணி 108- 131 இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. என்.டி.டி.வி கணிப்பின்படி, ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணி 124 இடங்களில் வெற்றி பெரும். பீகாரில் மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைப்பதற்கு 122 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டியது அவசியம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Bihar Election 2020, Congress

    அடுத்த செய்தி