• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு!

பீகாரில் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு!

குழந்தையை பறிகொடுத்த தாயின் கதறல் (Image: AFP)

குழந்தையை பறிகொடுத்த தாயின் கதறல் (Image: AFP)

மாநில சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் உயிரிழப்பை தடுக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. எனினும், உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கியுள்ள மூளைக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு வேகமாக நோய் பரவியது.

    இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்காளக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

    கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் பலியாகி இருந்தனர். நோய் பாதிப்பால் 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

    அங்குள்ள கிருஷ்ணா மருத்துவமனையிலும், கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் பலி எண்ணிக்கை இன்று 100-ஐ தொட்டுள்ளது.



    மாநில சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் உயிரிழப்பை தடுக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. எனினும், உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: