ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலியை சந்திக்க எலக்ட்ரீஷியன் செய்த காரியம்.. தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள்!

காதலியை சந்திக்க எலக்ட்ரீஷியன் செய்த காரியம்.. தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள்!

காதலியை இருட்டில் சந்திக்க எலக்ட்ரீஷியன் செய்த காரியம்.. தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள்!

காதலியை இருட்டில் சந்திக்க எலக்ட்ரீஷியன் செய்த காரியம்.. தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள்!

கிராம மக்கள் மின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அப்போது, மின் ஊழியர்கள் தந்த பதில் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  எலக்ட்ரீஷியன் ஒருவர் தனது காதலியை சந்திப்பதற்காக, செய்த செயல் அந்த ஊர்மக்களுக்கு தெரியவரவே, அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

  பீகாரின் பூர்னியா மாவட்டத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஒருவர், தனது காதலியை இருட்டில் சந்திப்பதற்காக அவர் வசிக்கும் கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்து வந்துள்ளார். அவர் எப்போதெல்லாம் காதலியை இருட்டில் சந்திக்க விரும்புகிறாரோ அப்போதெல்லாம் இதுபோன்று மின்சாரத்தை துண்டித்து வந்துள்ளார்.

  இந்நிலையில், அடிக்கடி கிராமத்தில் மின்வெட்டு ஏற்படவே ஊர் மக்கள் கடுப்பாகி உள்ளனர். மேலும், மின்வெட்டு தொடர்பாக அக்கம்பக்கம் உள்ள கிராமத்தில் விசாரித்துள்ளனர். அப்போது, எந்த கிராமத்திலும் இதுபோன்று அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதில்லை என்பது உறுதியானது.

  தொடர்ந்து, மின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதுபோன்று அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். அப்போது, அவர்கள் தரப்பில் அதுபோன்று அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.

  இதையடுத்து, நம் கிராமத்தில் ஏதோ சதி நடக்கிறது என்பதை உணர்ந்துள்ளனர். தொடர்ந்து, உண்மையை கண்டறிய கிராம மக்கள் முடிவு செய்து மின் இணைப்பை யார் துண்டிக்கிறார்கள் என்பதனை ஆதரங்களுடன் கண்டுபிடிக்க வேண்டும் என திட்டம் போட்டுள்ளனர்.

  அதன்படி, அதே கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஒருவர் தனது காதலியை அங்குள்ள பள்ளியில் தனிமையில் சந்திப்பதற்காக வழக்கம்போல் மின்சாரத்தை துண்டித்துள்ளார். அப்போது, அவரை ஊர் மக்கள் கையும் களவுமாக பிடித்தனர்.

  தொடர்ந்து, அந்த எலக்ட்ரீஷியனிடம் விசாரித்த போது, தனது காதலியை சந்திக்க விரும்பும்போதெல்லாம் கிராமத்தில் 2 மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து வந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, அந்த நபரை ஊர்வலமாக அழைத்துச்சென்று ஊர் மக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர்.

  எனினும், இந்த சம்பவம் தொடர்பாக அந்த நபர் மீது ஊர்மக்கள், போலீசில் எதுவும் புகார் தெரிவிக்கவில்லை. மேலும், இத்தோடு விடாமல் அந்த எலக்ட்ரீஷியன் காதலித்து வந்த பெண்ணை அவருக்கு ஊர்மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருமணம் செய்து வைத்தும் அழகு பார்த்துள்ளனர்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Lovers, Power cut