அரசு வேலைகளில் மாநில மக்களுக்கு 85 சதவீதம் ஒதுக்கீடு - அனல்பறக்கும் பீகார் தேர்தல்களம்

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியீடு.

, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் அளிக்கப்படும் என்றும் அரசு வேலைகளில் பீகார் மக்களுக்கு 85 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 • Share this:
  பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

  மும்முனை போட்டி நிலவும் பீகார் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜேயுடி மற்றும் பாஜக தனித்தனியாக தங்களது தேர்தல் அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டன. இந்நிலையில், ஆர்ஜேடி சார்பில் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஷ்வி யாதவ், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

  தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற கூட்டதில் அறிக்கையை வெளியிட்டு பேசிய தேஜஷ்வி, தங்கள் கூட்டணி ஆட்சிக் வந்தால் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். மேலும், பாஜக போன்று 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்ற பொய் வாக்குறுதி அளிப்பதை விட, எது சாத்தியமோ அதை கருத்தில் கொண்டே திட்டமிடப்படும் என்று கூறினார்.

  Also read: பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 56 சமூகத்திற்கும் வாரியங்கள் அமைப்பு - ஆந்திர முதலமைச்சர் ஜெகனுக்கு ராமதாஸ் பாராட்டு

  அத்துடன், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் அளிக்கப்படும் என்றும் அரசு வேலைகளில் பீகார் மக்களுக்கு 85 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இவை வெறும் தேர்தல் அறிக்கையாக இல்லாமல், பீகாரை மேம்படுத்தும் நோக்கில் அளிக்கப்படும் உறுதிமொழி எனவும் தேஜஷ்வி குறிப்பிட்டார்.

  இதனிடையே, பெகுசாரை (Begusarai) மாவட்டத்தின் தெக்ரா (Teghra) நகரில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் நிதிஷ்குமார், தங்கள் அரசு பீகாரில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றார். மேலும், கிராமங்கள் நகரங்களுடன் இணைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதற்காக, தரமான இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றார்.  மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள பீகார் சட்டப் பேரவை தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 28ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு, 3 நாட்கள் மட்டும் உள்ள நிலையில், பீகார் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர் தேவேந்திர பட்நாவிஸ், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், தேர்தல் களத்தில் அவர் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
  Published by:Rizwan
  First published: