Home /News /national /

பீகார் தேர்தல் : 78 தொகுதிகளுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று

பீகார் தேர்தல் : 78 தொகுதிகளுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று

கோப்பு படம்

கோப்பு படம்

15 மாவட்டங்களில் 78 தொகுதிகளில் நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 207 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    பீகார் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது... இதற்கான, இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 15 மாவட்டங்களில் 78 தொகுதிகளில் நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 207 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இதில், தற்போதையை அமைச்சர்களாக உள்ள பிஜேந்திர பிரசாத் யாதவ், வினோத் நாராயண் ஜா, மதன் சஹானி, சுரேஷ் சர்மா, லக்சிமேஷ்வர் ராய், பீமா பாரதி, நரேந்திரா நாராயண், சிங்கேஷ்வர் ஆகிய 8 பேர் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மீண்டும் போட்யிடுகின்றனர். பீகாரில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த பின், வருகின்ற 10-ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகிறது.

    மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்காக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அத்துடன், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Bihar Election 2020

    அடுத்த செய்தி