சூடுபிடித்த பீகார் தேர்தல் களம்: அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி

சூடுபிடித்த பீகார் தேர்தல் களம்: அனல் பறக்கும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி
  • Share this:
பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

பீகார் சட்டப் பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, முதல் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பீகார் தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, 12 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சசாரம் நகரில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றார். இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமாரும் கலந்துகொண்டார். பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒரு காலத்தில் இங்கு ஆட்சி செய்தவர்கள் தற்போது வளர்ந்து வரும் பீகாரை பேராசை கண்களால் பார்ப்பதாக கூறினார். தங்களை பின் தங்கிய நிலைமைக்குத் தள்ளியது யார் என்பதை, பீகார் மக்கள் மறந்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார். அத்துடன், பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.


இதைதொடர்ந்து பகல்பூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக விளங்குவதாக குற்றம் சாட்டினார். இதனிடையே, நவாடா மாவட்டத்தின் ஹிசுவா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இக்கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவரும், கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஷ்வி யாதவும் பங்கேற்றார்.

Also read: திருமாவளவன் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் - குஷ்பு காட்டம்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பீகார் மக்களிடம் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக சாடினார். மேலும், கடந்த தேர்தலின்போது, 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்களே, அதை நடைமுறைப்படுத்தினீர்களா எனவும் பிரதருக்கு கேள்வி எழுப்பினார்.முன்னதாக பேசிய தேஜஷ்வி, மத்தியில் ஆளும் பாஜக சாதி, மதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும், ஆர்ஜேடி கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வந்தால், 10 லட்சம் அரசு வேலை வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றவே, முதல் கையெழுத்து போடப்படும் என்று உறுதியளித்தார்.

இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்திற்காக ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டர், பூர்னியா விமானப் படை தளத்தில் தரையிறங்க உரிய அனுமதி பெறவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், ஹெலிகாப்டர் தரையிறங்க மாவட்ட நிர்வாகத்தில் அனுமதிக் கடிதம் ஏதும் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

முதல் கட்ட தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், தேசிய தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் பீகார் தேர்தல் களம் சூடுபீடித்துள்ளது.
First published: October 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading