பீகார் தேர்தலில் காங்கிரஸ் சறுக்கல்... தமிழகத்திலும் எதிரொலிக்குமா?

பீகார் தேர்தலில் காங்கிரஸ் சறுக்கல்... தமிழகத்திலும் எதிரொலிக்குமா?

கோப்பு படம்

பீகாரில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததால், தமிழகத்தில் திமுகவை எந்த வகையிலும் பாதிக்காது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் திமுகவையோ அதன் கூட்டணி கட்சிகளையோ பாதிக்காது என அக்கட்சியினர் கூறி வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளரவே முடியாது என எதிர்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

  பீகார் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி, கடந்த தேர்தலில் கொடுத்த அளவுக்கு தொகுதிகளை வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது இந்நிலையில், தமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி நன்றாகத்தான் இருக்கிறது என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

  பீகாரில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததால், தமிழகத்தில் திமுகவை எந்த வகையிலும் பாதிக்காது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

  இந்த நிலையில், தமிழகத்தில் இந்தி திணிப்பு நடந்தபோதே காங்கிரஸ் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், தற்போது திமுக முதுகில் சவாரி செய்து கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

  அதேபோல், தமிழகத்தில் திமுக நினைக்கும் சீட்டுகளை மட்டுமே காங்கிரசுக்கு கொடுக்கும் என்றும், அப்படி வாங்கும் இடங்களிலும் காங்கிரஸ் வெற்றிபெறாது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில், பீகார் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், பீகாரை விட, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை வென்று, ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: