Bihar Elections 2020 | பீகாரில் ஆட்சியமைக்கிறது பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி..

Bihar Elections 2020 | பீகாரில் ஆட்சியமைக்கிறது பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணி..

மோடி, நிதிஷ் குமார்

பீகாரின் வெற்றி குறித்து ட்வீட் செய்திருக்கும் பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்றுத் தந்திருக்கிறது, என்றவர் பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற வாக்களித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்தார்.”

  • Share this:
பீகார் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவை கடந்து அதிகாலை வரை இந்த முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கிறது.

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது.  இவற்றில் ஆட்சி அமைப்பதற்கு 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது.  பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும்,  பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த கூட்டணியும் போட்டியிட்டன.
இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்று வந்தது.






அனைத்து தொகுதிகளிலும் முடிவுகள் அறிவிப்பு RJD 75 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது. BJP 74, JDU 43 இடங்களில் வென்று ஆட்சியமைக்கிறது. நிதிஷ் மீண்டும் முதல்வராக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வென்று பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியுள்ளது.
Published by:Gunavathy
First published: