முகப்பு /செய்தி /இந்தியா / மருந்து ஆய்வாளர் வீட்டில் ரூ.100ல் இருந்து ரூ.2000 வரை கட்டுக்காட்டாக பணம்.. அதிர்ச்சியில் உறைந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்

மருந்து ஆய்வாளர் வீட்டில் ரூ.100ல் இருந்து ரூ.2000 வரை கட்டுக்காட்டாக பணம்.. அதிர்ச்சியில் உறைந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

ரூ.100இல் இருந்து ரூ.2,000 வரை அனைத்து வகை நோட்டுகளிலும் கட்டுக்கட்டாக பணம் மருந்து ஆய்வாளர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :

பீகார் மாநிலத்தில் மருந்து ஆய்வாளர் ஒருவரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கட்டில் முழுவதும் அடுக்கி வைக்கும் அளவிற்கு கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பீகார் தலைநகர் பாட்னாவில் வசித்து வருபவர் ஜிதேந்திர குமார். மருந்து ஆய்வாளராக பணிபுரியும் இவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அதிகாரிகளே அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் விதமாக கட்டுக்கட்டாக பணம் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. ரூ.100இல் இருந்து ரூ.2,000 வரை அனைத்து வகை நோட்டுகளிலும் கட்டுக்கட்டாக பணம் இவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றை ஒரு படுக்கை முழுவதும் பரப்பி வைத்த அதிகாரிகள் அவற்றை எண்ணி முடிக்க பல மணிநேரம் எடுத்துக்கொண்டனர். ஒரு கட்டத்தில் கைகளால் எண்ணி முடிக்க முடியாது என்பதால் பணம் எண்ணும் இயந்திரம் மூலம் எண்ணி முடித்துள்ளனர்.

வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை சுமார் ரூ.3 கோடி இருக்கும் எனக் கூறியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ரூ.36.48 லட்சம் மதிப்பில் தங்க நகை, ரூ.1.66 லட்சம் மதிப்பில் வெள்ளி நகை ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ரூ.2 கோடி மதிப்பில் பல்வேறு இடங்களில் பினாமி சொத்துக்களை இவர் சேர்த்து வைத்துள்ளதும் இந்த சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எவ்வளவு நாள் தான் அசாமில் ஒளிந்திருப்பீர்கள் - சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சஞ்சய் ராவத் கேள்வி

top videos

    இதற்கான ஆவணங்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது. ஒரு அரசு அதிகாரி தன்னுடைய வீட்டில் ரொக்கமாகவே சுமார் ரூ.3 கோடி பணத்தை பதுக்கி வைத்திருந்தது ரெய்டுக்கு சென்றவர்களையே மிரள வைத்துள்ளது.

    First published:

    Tags: Bihar, Vigilance officers