‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ நடிகர்கள், இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 10 ஆண்டு காலம் குறித்து இந்தப் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

news18
Updated: January 9, 2019, 10:00 AM IST
‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ நடிகர்கள், இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்
news18
Updated: January 9, 2019, 10:00 AM IST
‘தி ஆக்சிடெண்டல் பிரைம்மினிஸ்டர்’ படத்தின் நடிகர் அனுபர் கெர் மீது வழக்குப் பதிவு செய்ய பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்கின் பயோபிக்காக எடுக்கப்பட்டுள்ள ’தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ திரைப்படம் வரும் 11-ம் தேதி திரைக்கு வருகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 10 ஆண்டு காலம் குறித்து இந்தப் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் படத்தில் காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

இருப்பினும் படம் வெளியாகக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்தநிலையில், தி ஆக்சிடெண்டல் பிரைம்மினிஸ்டர் படத்துக்கு எதிராக சுதிர் குமார் ஓஜ்ஹா என்ற வழக்கறிஞர் முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவருடைய மனுவில், “படத்தின் ட்ரைலரை தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்பில் பார்த்து மனவருத்தமடைந்தேன்.

அந்தப் படம், இந்தியா மற்றும் இந்திய அரசியல் தலைவர்களான ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மாயாவதி, அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி ஆகியோர் இழிவாகக் காட்சிப்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கேர் உள்பட ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டத் தலைவர்களின் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
Loading...
Also see:

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...