ஹோம் /நியூஸ் /இந்தியா /

4 தலைமுறைகளை தாண்டிய 108 ஆண்டு வழக்கிற்கு ஒரு வழியாக தீர்ப்பு கிடைத்தது

4 தலைமுறைகளை தாண்டிய 108 ஆண்டு வழக்கிற்கு ஒரு வழியாக தீர்ப்பு கிடைத்தது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

1914ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் பிகார் நீதிமன்றம் 108 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பிகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்ட நீதிமன்றம் 108 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கிற்கு இன்று தீர்ப்பளித்துள்ளது. 1914ஆம் ஆண்டு தொடரப்பட்ட தர்பாரி சிங் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில் அவரது பேரன் அதுல் சிங் என்பவருக்கு சாதகமாக தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

பிகார் மாநிலம் கோலிவார் நகர பஞ்சாயத்து பகுதியில் தர்பாரி சிங் என்பவர் 1900களில் நாதுனி கான் என்பவரிடம் இருந்து ஒன்பது ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். 1911ஆம் ஆண்டில் நாதுனி கான் மரணமடைந்த நிலையில், இந்த இடங்களை அன்றைய பிரிட்டிஷ் அரசு கையகப்படுத்தியுள்ளது. விலை கொடுத்து வாங்கிய தர்பாரி சிங் இதற்கு எதிராக 1914ஆம் ஆண்டு முதல் சட்டப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்த வழக்கை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்காக சதேந்திரா சிங் என்பவர் ஆஜரானார். இவரது குடும்பத்தினர் தான் மூன்று தலைமுறையாக அந்த குடும்பத்தின் சார்பாக ஆஜராகி வருகின்றனர். இவரது தாத்தா சிவ்விரத் நாராயண் சிங் முதலிலும் பின்னர் இவரது தந்தை பத்ரி நாராயண் அடுத்தும், இறுதியாக சதேந்திரா சிங்கும் வாதாடி தர்பாரி சிங் குடும்பத்திற்கு இறுதியாக வெற்றி தேடி தந்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பை மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஸ்வேதா சிங் வழங்கினார்.

இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சொத்தை விற்ற நபர்கள் தற்போது யாரும் இந்தியாவிலேயே இல்லை. பிரிவினை காலத்தின் போது இவர்கள் அனைவரும் பாகிஸ்தானிற்கு குடிபெயர்ந்துள்ளனர். எனவே, இந்த வழக்கு 108 ஆண்டுகள் பிடிக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: கியான்வாபி மசூதி வழக்கை அனுவபம் வாய்ந்த நீதிபதி ஒருவர் விசாரிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிரகாஷ் சிங் உள்ளிட்ட பலரும் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது குறித்து இணையத்தில் ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். நூற்றாண்டு வழக்கு என்ற பெருமை கொண்ட இந்த வழக்கின் தீர்ப்பு சமூக வலைத்தளத்தின் வைரல் கண்டென்ட் ஆக உருவெடுத்துள்ளது.

First published:

Tags: Bihar, Court Case, Property